பக்கம்:மன ஊஞ்சல்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 54 மன ஊஞ்சல் "ராதா, நான் அவரை மறக்கத் தான் முயலுகிறேன். ஆனால், திரும்பத் திரும்ப அவருடைய நினைவு வந்து என்னை வாட்டுகிறது! காதல் என்பதே பொய்யென்றுதான் நான் எண்ணுகிறேன். ஆனால், அது என்னை இப்படித் துன்பப்படுத்துவதற்கென்றே தோன்றியுள்ளதோ என்று எண்ண வேண்டியிருக்கிறது!’ என்றாள் தங்கம். 'தங்கம், காதல் என்றும் பொய்யானதல்ல; ஒத்த பருவமும், ஒத்தகுணமும், ஒத்த அன்பும் உடையவர்களிடம் ஏற்படுகின்ற காதல் எப்போதும் மறையாது. அவர்கள் மறைந்தாலும் அவர்கள் காதல் மறையாது. காவியங்களிலே காட்டப்படுகின்ற அந்த நிலையான காதல், வெறும் கற்பனையல்ல! அந்த உயிரான காதல் உண்மையில் உள்ளது தான்! உண்மையில் நிகழ்ந்த காதலாக இருப்பதால் தான் அந்த உயர்ந்த காதல் காவியங்களிலே நிலையான இடத்தைப் பெற்று விட்டது. அழியக்கூடிய தன்மையுள்ள தாக இருந்திருந்தால்-அந்தக் காதலை-வெறும் மாயத் தோற்றமாக இருந்திருந்தால்-அந்தக் காதலை - எந்தக் கவிஞனும் எடுத்துப் பாடியிருக்கமாட்டான். ஆனால், எல்லாருக்கும் எப்போதும் ஏற்படுகின்ற காதல் எல்லாம் உயிர் நிலையை அடைந்துவிடமுடியாது!’ என்று ராதா பெரிய அறிவாளிபோல் பேசினாள். 'உண்மைதான் ராதா, ஆனால் அந்த உயர்ந்த காதலுக்கும் நமக்கும் வெகு தூரம்' என்று சலிப்போடு பதில் சொன்னாள் தங்கம். 'இல்லை, நல்லவர்கள் இதயத்தில் எழுகின்ற காதல் என்றும் நாசமடைவதில்லை. அந்தக் காதல் நிறை வேறினாலும். நிறைவேறாவிட்டாலும் அது அவர்கள் இதயத்திலும், வாழ்விலும் ஒளி வீசிக்கொண்டேயிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/164&oldid=854273" இலிருந்து மீள்விக்கப்பட்டது