பக்கம்:மன ஊஞ்சல்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 155 அந்த ஒளியின் நிழலில் வாழும் காதலர்களின் இதயம் என்றும் அமைதியிலும் இன்பத்திலும் தோய்ந்திருக்கும்!" என்றாள் ராதா. தங்கம் ராதா சொல்வது புரியாமல் அவளைத் தன் கண்களால் அகல விழித்து நோக்கினாள். 'தங்கம்! ஒர் உயிர் மற்றோர் உயிரை நேசிக்கின்றபோது, ஏற்படுகின்ற உணர்ச்சிக்குத் தான் அன்பு என்று பெயர். ஆணும் பெண்ணுமாகிய இருவரிடையே ஏற்படும் இந்த அன்பைக் காதல் என்று நாம் சொல்லுகின்றோம். தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் இந்த உயிருணர்வைப்பாசம் என்று சொல்லுகிறோம். நண்பர்களுக்கிடையே ஏற்படும் இந்த உணர்வை நட்பு என்கிறோம், எந்த நிலையில் எந்தப் பெயரோடு இருந்தாலும் இந்த அன்பு தன்னைக் கொண்ட வர்களை இன்பத்துடன் இருக்கச் செய்யும் சக்தி வாய்ந்தது. நேசிக்கும் இருவரிடையேயும் ஒத்த அன்பு இருந்தால் அதற்கு நிகரான ஆனந்தம் வேறில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் ஒருவரிடம் மட்டும் இந்த அன்பு இருந்தாலும் கூட அது இருவருக்கும் நலம் சேர்ப்பதும் இன்பம் உண்டாக்கு வதும் உண்டு. பெற்ற பிள்ளை அன்பு காட்டாவிட்டாலும் தாய் அவனைக் கடைசிவரை நேசிக்கிறாள். அவள் காட்டுகின்ற அன்பு என்றும் அழிவில்லாததாயிருக்கிறது. அவள் அன்பு ஒரு பக்க அன்பாக இருந்தாலும், அந்த அன்பால் பிள்ளை நலமாக இருப்பது கண்டு தாயும் இன்ப மனடகிறாள். இவ்வாறு இருவருக்குமே நலமும் இன்பமும் பயக்கும் இயல்புடையது இந்த அன்பு. ராதா இவ்வாறு சொல்லி வரும் போதே தங்கம் இடை மறித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/165&oldid=854274" இலிருந்து மீள்விக்கப்பட்டது