பக்கம்:மன ஊஞ்சல்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மன ஊஞ்சல் "ராதா நீசொல்ல நினைப்பது என்ன வென்று எனக்குப் புரிகிறது. தன் காதலுக்குரியவர் தன்னை உண்மையாகக் காதலிக்கா விட்டாலும், அவர் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்; அவர் அடைகின்ற இன்பத்தையே தன் இன்பமாகக் கொள்ளவேண்டும். அவரோடு வாழ முடியா விட்டாலும், அவர் நன்றாக வாழ வேண்டும்மென்று எண்ண வேண்டும்-அவருடைய நல் வாழ்வு கண்டு ஆனந்தப் பட வேண்டும்-அப்போதுதான் தான் கொண்ட கா த ல் உண்மைக் காதல் என்று கருதலாம்-ராதா இதுதானே உன் கருத்து?' என்று கேட்டாள் தங்கம். "ஆம் அன்பு என்பதே பிறர் நலம் கண்டு இன்பம் காணும் உணர்ச்சிதான். எவரிடத்தில் தன் அன்பு பாய் கிறதோ, அவர் இன்பங்கண்டு தானும் இன்பம் காண்பது தான்!" என்றாள் ராதா. அன்று, ராதாவிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பி வந்த தங்கம், ஒரு புதுப் பெண்ணாக வந்தாள் என்றே சொல்லலாம். தன் மனக்குழப்பங்களுக்கெல்லாம் மருந்தருந்தி ஒரு தீர்வு கண்டு வந்த தங்கம் ராதாவின் பேச்சுக்களை எண்ணி எண்ணிப் பார்த்தாள் அப்போதெல்லாம் ராதா விடம் இவ்வளவு அறிவுக் கருத்துக்கள் எங்கிருந்து வந்தன என்று அவள் மிகவும் ஆச்சரியப் பட்டாள். பட்டிக் காட்டுப் போக்கும் பழைய குருட்டு தம்பிக்கைகளும் ராதாவிடம் அதிகம் உண்டு என்பது தங்கத்திற்குத் தெரிந்த செய்தி. ஆனால், ஒரு பெரிய தத்துவமேதை பேi ல அவள் பேசியதைத் தங்கம் அப்போது தான் முதன்முதலாகக் கண்டாள். ஒருவேளை, காதல் தன் வயப்பட்டவர்களை மேதைகளாய் ஆக்கிவிடக்கூடிய சக்தியுள்ளதாயிருக்குமோ? என்று கூட அவள் எண்ணினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/166&oldid=854275" இலிருந்து மீள்விக்கப்பட்டது