பக்கம்:மன ஊஞ்சல்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 157 வீட்டிலே இப்படிப் பல சிந்தனைகளிலே ஈடுபட்டிருந்த தங்கம் அண்ணாமலைப் பண்டிதரின் குரல் கேட்டு அவர் வந்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். மீனாட்சி போய் விட்டதைப் பற்றி அவர் எதுவும் கேட்பாரோ என்று தங்கம் எதிர் பார்த் தாள். ஆனால், மீனாட்சியை வீட்டிலே வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று முதலில் அம்மாவிடம் கூறிய பண்டிதர் இப் போது அவள் போனதைப் பற்றி இலட்சியப் படுத்திப் பேசவேயில்லை. ஒரு வேளை. எல்லாம் தெரிந்த அவர் மீனாட்சியின் குணத்தையும் தெரிந்துவைத்திருந்தாரோ என்னவோ? அண்ணாமலைப் பண்டிதர், குரல் கேட்டதும் தங்கம் அவர் பக்கம் திரும்பிப் பார்த்தாள், அவளை வரும்படி. கையைக் காட்டி விட்டு அவர் சமையலறைக்குள்ளே நுழைந் தார். அங்கே மரகத அம்மாள் மோர் கடைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். திரண்டு வரும் வெண்ணெயின் மீதே கண்ணாயிருந்த மரகத அ ம் மா ள் அண்ணாமலைப் பண்டிதரின் குரல் கேட்டுத் திடுக்கென்று திரும்பிப் பார்த் தாள். - . 'மரகதம்|முன்னெல்லாம், தான்கதலிப் பட்டணத்துக்குப் போனால், நடராசன் கூட வருவான் இப்போது நாளைக்குப் நான் போய்வர வேண்டியிருக்கிறது. துணைக்கு ஒர் ஆளிருந்தால் நல்லது. தங்கத்தையும் என்னோடு அனுப்பு கிறாயா?" என்று கேட்டார் அண்ணாமலைப் பண்டிதர். அண்ணாமலைப் பண்டிதர் சொல்லி மரகத அம்மாள் எதையும் மறுத்ததில்லை. அவளுக்கு ஏதோ அவரிடம் மதிப்பு இருந்தது. அதுமட்டுமல்ல அவரிடம் பயம் கலந்த ஒர் அன்பும் இருந்தது. அவள் அவரைத் தன் சொந்த அண்ணனைப் போல் மதித் துப் போற்றி வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/167&oldid=854276" இலிருந்து மீள்விக்கப்பட்டது