பக்கம்:மன ஊஞ்சல்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மன ஊஞ்சல் 'இதோ தங்கத்தைக் கூப்பிட்டுச் சொல்லிவிடுகிறேன். அண்ணா!' என்றாள் மரகத அம்மாள். அதற்குள் தங்கமும் அடுக்களைக்குள் வந்துவிட்டாள், 'தங்கம் நாளைக்கு அண்ணாவுடன் கதவிப்பட்டணம் போய் வருகிறாயா?" என்று கேட்டாள். மரகத அம்மாள் தன் மகளிடம் எப்பொழுதும் இப்படித் தான் அவளைக் கேட்பதுபோல் கட்டளையிடுவாள், தங்கமும் சரியென்று சொல்லுவதுதான் வழக்கம், வழக்கத்தை மீறி நடக்கவில்லை தங்கம். . "போய் வருகிறேன் அம்மா!' என்று மலர்ந்த முகத்துடன் கூறினாள். 'தங்கம், சும்மா வந்தால் போதாது எனக்கு வண்டி ஒட்டிக் கொண்டு வரவேண்டும் தெரியுமா?" என்று கேட்டார் அண்ணாமலைப் பண்டிதர், ஏதோ விளையாட்டுக்குச் சொல்லுகிறார் என்றுதான் தாயும் மகளும் எண்ணினார்கள். ஆனால் மறுநாள் புறப்படும்போது தான் அவர் சொன்னது வேடிக்கையல்ல என்று தெரிந்தது. மறுநாள் காலை சரியாக எட்டு மணிக்கு முருகேச வாத்தியார் வழக்கமாக நடராசன் ஒட்டிக்கொண்டு வரும் ஜமீந்தார் வீட்டு மாட்டு வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தார். வீட்டு வாசலில் வண்டி வந்து நின்றதைக் கண்டவுடனே 'தங்கம்! தங்கம்!" என்று கூப்பிட்டுக் கொண்டே அண்ணாமலைப் பண்டிதர் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/168&oldid=854277" இலிருந்து மீள்விக்கப்பட்டது