பக்கம்:மன ஊஞ்சல்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 159 தங்கம், குளித்து முழுகி புத்தாடை பூண்டு சீவிச் சடைப் பின்னிக் கொண்டு தயாராக இருந்தாள். மரகத அம்மாளிடம் சொல்லிக்கொண்டு அவள் வாசலுக்கு ஓடி வந்தாள். வண்டியை வாசலில் நிறுத்திய முருகேச வாத்தியார் அண்ணாமலைப் பண்டிதரைக் கண்டவுடன், வண்டியைக் கொண்டு வந்து விட்டேன் நான்போய் வருகிறேன்’ என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார். ஒட்டுவாரில்லாத அந்த வில் வண்டியில், ஏறிக்கொண்ட அண்ணாமலைப் பண்டிதர், தங்கத்தையம் ஏறிக்கொள்ளச் சொன்னார். அவள் வண்டியில் ஏறிப் பின்புறமாக உட்கார்ந் தாள். . 'தங்கம் முன்னால் வந்து வண்டியை ஒட்டு!" என்று கட்டளையிட்டார் அண்ணாமலைப் பண்டிதர். பண்டிதர் தன்னிடம் விளையாடுகிறார் என்றுதான் தங்கம் முதலில் எண்ணினாள், ஆனால், அவர் திரும்பத் திரும்பக் கண்டிப் பான குரலில் அவளே வண்டி யோட்ட வேண்டுமென்று வற்புறுத்தினார். தங்கத்திற்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. மரகத அம்மாள் வேறு வாசலில் வந்து நின்றுகொண்டிருந் தாள். கந்தசாமி வாத்தியார் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த படியால் அங்கு வழியனுப்ப வரவில்லை. கடைசியாகத் தங்கம் வண்டியின் முன்புறத்திற்கு வந்து சேர்ந்தாள். கயிற்றையும் கையில் பிடித்தாள், "சும்மா வெட்கப்படாதே! தட்டி ஒட்டு நாளைக்குக் காரோட்ட வேண்டிய கையல்லவா!' என்று சொல்லிச் சிரித்தார் பண்டிதர். தங்கம் எப்படியோ, தன் வெட்கத்தையெல்லாம் மறைத்துக்கொண்டு ஹே! ஹே என்று மாடுகளைத் தட்டி விட்டாள். - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/169&oldid=854278" இலிருந்து மீள்விக்கப்பட்டது