பக்கம்:மன ஊஞ்சல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் - 7 முருகேசர் அந்தப் பையனுக்கு உன்னைத் திருமணம் செய்து... அவர் வார்த்தையை முடிக்கவில்லை. தங்கத்தின் முகத்தில் நாணத்தின் சிவப்பு படர்ந்தது" வெட்கித் தலை குனிந்து கொண்டாள். அவள் மனமோ எங்கோ உல்லாச உலகிலே பவனி சென்று கொண்டிருந்தது. முருகேச வாத்தியார் வளர்த்த பிள்ளையென்றால் அவரைப்போல அறிவாளியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். இலக்கியம் விரும்பிக் கற்றவன் தன் கணவனாக வந்தால் வாழ்க்கை எவ்வளவு இன்பமாக இருக்கும்! பருவமடைந்த புதிதில் கலியாணப்பேச்சு வரும் போதெல்லாம் தன்கணவன் தமிழ் இலக்கியம் படித்தவனாக இருக்க வேண்டும் என்று அவன் கனவு காண்பாள். தன் கருத்துக்குகந்த கணவன் கிடைப்பதற்காகத்தான், கடவுள் இத்தனை காலம் கலியாணமாகாமல் தடுத்து வைத்திருக் கிறார் என்று அவள் எண்ணமிட்டாள். "அவருடைய சொந்தப்பிள்ளையாக இருந்தால் நான் யோசிக்க மாட்டேன். ஆனால், இவன் யார் பெற்ற பிள்ளையோ?” 'என்னப்பா! கற்றுச்சிறந்த நீங்களே, இப்படிப்பேசினால் என்ன ஆவது? சேற்றில் பிறந்தாலும் செந்தாமரை செந்தா மரைதான்; குப்பைமேட்டில் கிடந்தாலும் குன்றிமணி குன்றி மணிதான் என்று நீங்களே அடிக்கடி சொல்வீர்களே? கள்ளி வயிற்றில் அகில் பிறக்கிறது; காட்டில் சந்தனம் தோன்று கிறது. அதுபோல நல்லவர்கள் எங்கு பிறந்தாலும் சிறந்தவர் களே: என்று வெட்கத்தை விட்டுப் பேசிவிட்டாள் தங்கம். 'அவன் பிறப்பைப் பற்றி நான் கவலைப்படவில்லை யம்மா! ஆனால், அவன்...அவன்...' என்று திக்கித் திணறிய கந்தசாமி அதற்குமேல் பேசமுடியாமல் விக்கி விக்கி அழித் தொடங்கி விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/17&oldid=854279" இலிருந்து மீள்விக்கப்பட்டது