பக்கம்:மன ஊஞ்சல்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன் ஊஞ்சல் 18. ஜமீந்தார் மாளிகை அண்ணாமலைப் பண்டிதர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்தார். அவருடைய கோபத்திற்குப் பயந்தே தங்கம், தனக்கு விருப்பமில்லாவிட்டாலும், மாடுகளின் கயிற்றைத் தளர்த்திப் பிடித்து அவற்றின் முதுகில் தார்க் கம்பினால் தட்டி ஹே! ஹே என்று சத்தமிட்டு ஒட்டிக்கொண்டு போனாள். மாடுகள் கொஞ்சம் அயர்ந்து நடக்க ஆரம்பித்தாலும் உள்ளேயிருந்தபடியே அண்ணா மலைப் பண்டிதர், 'தங்கம், தட்டி ஒட்டு தட்டி ஒட்டு!" என்று தூண்டிக்கொண்டிருந்தார். வீதியில் இந்த விந்தைக் காட்சியைக் கண்ட மக்களெல்லாம் அதிசயந் தோன்றும் முகபாவத்தோடு திரும்பிப் பார்த்துத் தியங்கி மயங்கி நின்றார்கள்! 'ஆ1 ஒரு பொம்பிளை வண்டி ஒட்டுறா என்று தங்கள் ஆச்சரியத்தை வாய் விட்டு வெளிப்படுத்தினார்கள் சில பெண்கள். தாவாடையில் கைவைத்துத் தங்கள் வியப்புணர்ச்சியில் அது தரையில் விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள் சில பெண்கள். காலம் கவிகாலமோன்னோ! கன்னிப் பெண்கள் கூட இப்படித் துணிஞ்சிட்டாங்க! என்று காலத்தைப் பழித்துப் பேசினார்கள் சில வைதிகர்கள். இப்படியாக ஊரெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/170&oldid=854280" இலிருந்து மீள்விக்கப்பட்டது