பக்கம்:மன ஊஞ்சல்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 161 வைதிகர்கள்! இப்படியாக ஊரெல்லாம் பார்த்துச் சிரிக்க, உள்ளத்திலே வேதனை பொங்க, அந்த அண்ணாமலைப் பண்டிதர் ஒருவருடைய மனம் மட்டும் கோபத்தால் குமுறாமல் இருந்தால் போதும் என்ற எண்ணத்தோடு தங்கம் மாடுகளைத் தட்டி ஒட்டினாள். - - நெய்யூரிலிருந்து கதலிப் பட்டணம் வரும் வரையிலே வழி முழுவதும், அந்த வண்டியைப் பார்த்தவர்கள் தங்கள் ஆச்சரியத்தையும் அங்கலாய்ப்பையும் காட்டிக் கொள்ளத் தவறவில்லை. அவ்வப்போது சின்னஞ்சிறுவர்கள் வண்டியைத் தொடர்ந்து தொட்டுக்கொண்டு ஓடிவந்தார்கள். அண்ணா மலைப் பண்டிதர் அவர்களையெல்லாம் வண்டியைப் பிடித் திருக்கும் கைகளை எடுத்துவிடும்படி அதட்டி விரட்டியடித் தார். வழியில் தென்பட்ட வாலிபர்கள் அதிலும் குறும்பு மிகுந்தவர்கள், பலே! பலே! லேடி சபாஷ்!” என்று தங்கள் போக்கிரித் தனத்தோடு கூடிய பாராட்டுரைகளை வெளிப் படுத்தினார்கள். ஆனால், அண்ணாமலைப் பண்டிதரின் முகத்தைப் பார்த்தவுடனே அந்தக் குறும்பர்களின் வாலாட்ட மெல்லாம் எங்கே போய் ஒடி ஒளிந்தனவோ தெரியாது. இப்படியாக வழி முழுதும் கேலியும் கெக்கலிப்பும் ஏற்பட வண்டியோட்டிக் கொண்டு வந்த தங்கம் கடைசியாகக் கதலிப் பட்டணத்துக்குள்ளே வந்து சேர்ந்தாள். அங்கும் வீதிகளில் இது போன்ற நிகழ்ச்சியே நடைபெற்றது: அண்ணாமலைப் பண்டிதர் வலம்-இடம் என்று கூறக் கூற அவள் அந்தந்த வீதிகளிலே வண்டியைத் திருப்பி ஒட்டிக் கடைசியாகக் கதலிப் பட்டணம் ஜமீந்தார் அவர்களுடைய மாளிகையின் முற்றவாசலிலே கொண்டுவந்து வண்டியை நிறுத்தினாள். மன-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/171&oldid=854281" இலிருந்து மீள்விக்கப்பட்டது