பக்கம்:மன ஊஞ்சல்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 163 அண்ணாமலைப் பண்டிதரை முதன் முதல் பார்த்த போது ஏற்பட்ட ஒரு பயபக்தியான மரியாதையுணர்ச்சி போலவே, அந்த ஜமீந்தாரைப் பார்த்தபோதும் அவளுக்கு ஒரு பணிவுணர்ச்சி ஏற்பட்டது. - அவர் தங்கத்திடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டார். அண்ணாமலைப் பண்டிதர் தங்கத்திற்கு, 'அம்மா இவர் தான் ஜமீந்தார் கருணாகரர்' என்று கதலிப்பட்டணம் ஜமீந்தாரை அறிமுகப்படுத்தி வைத்தார். உடனே தங்கம், தன் இருகையும் சேர்த்துக் கூப்பி ஜமீந்தாருக்கு வணக்கம் தெரிவித்தாள். 'வா! அம்மா!' என்று கனிந்த குரலோடு வரவேற்ற கருணாகரர், உளளே உன் மாமியிருக்கிறாள், அங்கே போயிரு!' என்று சொல்லி அவளுக்குக் கதவுப் பக்கம் கைகாட்டினார், தங்கம், அந்தப் பக்கம் திரும்பிய அதே நேரத்தில் இரண்டு பணிப்பெண்கள் ஓடிவந்து, 'அம்மா, பெரியம்மா உள்ளே யிருக்கிறார்கள் வாருங்கள்!' என்று மிகவும் பணிவாகக் கூறி அவளை அழைத்துச் சென்றார்கள். தங்கத்திற்கு எல்லாம் புரியாத புதிராக இருந்தது. அண்ணாமலைப் பண்டிதர் கதலிப் பட்டணத்திற்கு அழைத்த போது, அவர் தம் வீட்டிற்குத் தான் அழைக்கிறார் என்று அவள் எதிர் பார்த்தாள். அண்ணாமலைப் பண்டி தருக்குத் தனியாக ஒரு வீடு இருக்கிறதென்று அவள் கேள்விப்பட்டிருந்தாள். அங்கு தனியாக இருக்கப் பிடிக் காமல் தான், தங்கள் வீட்டிலே அவர் தங்கி விட்டார் என்றும் அவள் அறிந்திருந்தாள், இப்போது ஏதோ நூல் எழுதவோ, ஆராய்ச்சி செய்த குறிப்புக்களைத் திரட்டவோ தான் அவர் தன்னைத் துணைக்கழைத்துக் கொண்டு வந்திருக்கிறார் என்று எண்ணிய தங்கம் ஜமீந்தார் வீட்டிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/173&oldid=854283" இலிருந்து மீள்விக்கப்பட்டது