பக்கம்:மன ஊஞ்சல்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மன ஊஞ்சல் அவர் தன்னை அழைத்துக் கொண்டு வந்த காரணம் புரியாமல் திகைத்தாள். திகைத்த நெஞ்சத்துடனிருக்கும் போதே, பணிப் பெண்கள் அவளை ஜமீந்தாரிணி அம்மாள் முன்னிலையில் கொண்டு வந்து விட்டார்கள். இரத்தினச் சமுக்காளம் ஒன்றின் மீது திண்டின் மீது சாய்ந்து ஒய்வாக இருந்த அந்த அம்மாள் தங்கத்தைக் கண்டவுடன் எழுந்து வந்து ஆர்வத்தோடு அவளைக் கட்டியனைத்து. “வந்தாயா என் தங்கம்!’ என்று அன்பு குழைய வரவேற்று அவள் கன்னத்தைப் பிடித்திழுத்து ஒரு முத்தமும் இட்டாள். தங்கத்தைக் கண்டபோது சுருங்கி யிருந்த அந்தப்பெரியம்மாளுடைய முகம் மலர்ந்து விரிந்தது. இலேசாகக் குழிந்திருந்த அந்தக் கண்களிலும் ஒளி பெருகியது. ஜமீந்தார் கருணாகரரும். ஜமீந்தாரிணி பெரியம்மாவும் வரவேற்ற பாணிப்பைக் கண்டபோது அவர்கள் தான் வருவதை முன்கூட்டியே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல் தங்கத்திற்குத் தோன்றியது. எல்லாம் அண்ணாமலைப் பண்டிதரின் ஏற்பாடாகத் தான் இருக்கவேண்டும் என்று எண்ணினாள் அவள். ஆனால், ஏன் தன்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தார் என்பது அவளுக்குப் புரியாமல் இருந்தது. அண்ணாமலைப் பண்டிதரின் காரியங்கள் எல்லாமே புரியாத புதிராகத்தான் தோன்றின. தங்கமோ அவரை மீறி நடக்கவோ, ஏனெதற்கு என்று கேட்டுச் செய்யவோ சக்தியில்லாத வளாயிருந்தாள். போகப் போகப் புரிந்துகொள்வோமென்று பேசாமலிருந்தாள். ஜமீந்தாரிணியம்மாள் தங்கத்தை உட்காரச்சொன்னாள். திங்கம், ஒதுங்கிப்போய்த் துானோரத்தில் உட்கார்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/174&oldid=854284" இலிருந்து மீள்விக்கப்பட்டது