பக்கம்:மன ஊஞ்சல்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 165 உடனே அந்தப்பணிப்பெண்கள் கலகலவென்று சிரித்தார்கள். 'தங்கம், இப்படி வா அம்மா!' என்று அந்தப் பெரியம்மா தன் அருகில் இரத்தினச் சமுக்காளத்தில் வந்து உட்காரச் சொல்லியழைத்தாள். தங்கம் பயத்துடன் நெருங்கிப்போய் அந்தச் சமுக்காளத்தின் ஒரத்தில் உட்கார்ந்தாள். அதன்பின் பெரியம்மா ஏற்கனவே பத்துப் பதினைந்து வருஷப் பழக்கம் உள்ளவள்போல், தங்கத்தின் குடும்பத் தினரைப் பற்றியும் அவர்கள் நலங்களைப் பற்றியும் விசாரித் தாள், தங்கம், ஏதோ தனக்கு ஒவ்வாத ஓர் உலகத்தில் தெரியாத நிலையில் புரியாதவளாகப் புகுந்துவிட்டதுபோல் எண்ணிக் கொண்டிருந்தபடியால் அந்த அம்மாளோடு கலகலக்கப் பேசவில்லை, அந்த அம்மாள் கேட்ட கேட்ட கேள்விகளுக்குச் சட் சட்டென்று ஒன்றிரண்டு சொற் களிலேயே பதிலளித்து அமைந்து விட்டாள். இவ்வாறு பேசிக்கொண்டே அவர்கள் இருக்கும்போது பகல் மணி பனிரெண்டடித்துவிட்டது. உடனே வேலைக் காரப்பெண்கள் அங்கு ஒடிவந்து, சாப்பிட அழைத்தார்கள் சாப்பாட்டுக் கூடத்தில், பெரியம்மாவும் தங்கமும் நுழைந்தபோது அங்கு ஏற்கனவே ஜமீந்தார் கருணாகரரும் அண்ணாமலைப் பண்டிதரும் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் முன்னாலே மேசை மீது வெள்ளித்தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. மேசையின் மறு பக்கத்தில் இருந்த இரு நாற்காலிகளுக்கும் எதிரில் மற்றும் இரண்டு வெள்ளித்தட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவை, தனக்காகவும் ஜமீந்தாரிணி அம்மாளுக்காகவும் வைக்கப் பட்டிருக்கின்றன என்று தங்கம் தெரிந்துகொண்டாள். அண்ணாமலைப் பண்டிதர் தங்கள் வீட்டில் தரையில் போடப்படும் தடுக்கிலேயே தான் உட்கார்ந்து சாப்பிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/175&oldid=854285" இலிருந்து மீள்விக்கப்பட்டது