பக்கம்:மன ஊஞ்சல்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மன ஊஞ்சல் வதைக் கண்டிருக்கிறாள். தளிர் வாழையிலையில்தான் அவருக்கு அவர்கள் இதுவரை சாப்பாடு போட்டு வந்திருக் கிறார்கள். ஆனால், இப்போது மேசையின்மீது வெள்ளித் தட்டில் அவர் சாப்பிடப் போவதைக் கண்டு தங்கம் வியப் படைந்தாள். நிலைமைக்கும் இடத்திற்கும் தகுந்தாற்போல் அவர்தம் பழக்க வழக்கங்களை எவ்வளவு எளிதாக மாற்றிக் கொண்டு விடுகிறார் என்று எண்ணி ஆச்சரியப்பட்டாள் தங்கம். ஜமீந்தாரிணி அம்மாள் தன்னையும் அழைத்துக் கொண்டு போய், அவர்களுடன் உடனிருந்து உணவு கொள்ளத் தொடங்கியதும். தங்கத்தின் வியப்புணர்ச்சி மேலும் பெருகியது. அவர்கள் வீட்டில் எப்போதும் ஆடவர் கள் முதலில் உணவருந்திய பிறகுதான் பெண்கள் உணவுட் கொள்வது வழக்கம். ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருந்து உண்பதே கிடையாது. இங்கு எல்லாம் மாறுபாடாக நடக்கக் கண்டு அவள் வியப்படைந்தாள்; திகைப்புமுற்றாள். தங்கம் சரியாகச் சாப்பிடவேயில்லை. அவள் இதற்குமுன் இப்படிப்பட்ட இடங்களில் இருந்ததுமில்லை , இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களைக் கைக் கொண்டதுமில்லை. இப்படிப் பட்ட உயர்தரமான சாப்பாட்டைச் சாப்பிட்டதுமில்லை. மேசையின் மீது ஒவ்வொருவருக்கும் எதிரில் ஒவ்வொரு வெள்ளித்தட்டு இருந்தது. அதில் பணிப்பெண்கள் சோறு போட்டார்கள், அந்த வெள்ளித் தட்டுகளைச் சுற்றி ஏழு ஏழு கிண்ணங்கள் இருந்தன, அவையும் வெள்ளிய லானவையே. அவற்றில் நான்கு விதமான காய்கறிகள் இருந்தன . கிண்ணங் களில் ஒரு கிண்ணத்தில் ரசமும் மற்றொரு கிண்ணத்தில் பாயசமும் இருந்தன, ஏழாவது கிண்ணத்தில் பொரித்த அப்பளம் இருந்தது, இவைபோதாவென்று சாப்பிட்டவுடனே எதிரில் வாழைப்பழங்களும், மாம்பழங்களும், பலாச்சுளை களும் வெள்ளித்தட்டுகளில் கொண்டுவந்து வைத்தார்கள். தங்கம் எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்துவிட்டு வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/176&oldid=854286" இலிருந்து மீள்விக்கப்பட்டது