பக்கம்:மன ஊஞ்சல்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 167 விட்டாள், கிழவர்கள் இருவரும் கிழவியும் தொண தொண வென்று பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். தங்கம் அவர்கள்பேச்சில் கலந்து கொள்ளவில்லை, அந்தப் பேச்சுக்கள் அவளுக்குச் சம்பந்தமில்லாத செய்திகளில் ஓடின. சாப்பிட்டபின், ஜமீந்தாரிணி அம்மாள் தங்கத்தை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய கூடத்துக்குச் சென்றாள் அங்கே அவர்களுக்காக மெத்தை விரித்து வைக்கப் பட்டிருந்தது. தங்கம் கொஞ்ச நேரம் உறங்கு!" என்றாள் அந்த அம்மாள். தங்கம், சாப்பிட்ட பிறகு உறங்கிப் பழக்கமில்லை. அவள் எனக்கு உறக்கமே வரவில்லை என்று சொல்லி விட்டாள். "அப்படியானால், இப்போது என்ன செய்யப் போகிறாய்?" என்று பெரியம்மா கேட்டாள். - 'போய்ப் பாத்திரங்களை விளக்கி வைத்து விட்டு வருகிறேனே!' என்றாள் தங்கம். 'அதற்கெல்லாம் வேலைக்காரர்கள் இருக்கிறார்கள், நீ பேசாமல் சும்மா இரு' என்றாள் பெரியம்மா. “சும்மா எப்படி இருப்பது?" என்று கேட்டாள் தங்கம். உடனே ஜமீந்தாரிணி அம்மாளுக்கு ஒர் எண்ணம் தோன்றியது. 'தங்கம் நீதான் இதற்கு முன் இங்கே வந்ததில்லையே! மாளிகையையும் தோட்டத்தையும் சுற்றிப் பார்த்துக் கொண்டு வாயேன்” என்றாள். தங்கத்திற்கும் அது சரியென்று படவே தலையை ஆட்டினாள். உடனே பெரியம்மா ஒரு பணிப்பெண்ணை அழைத்து மாளிகை முழுவதும் சுற்றிக் காட்டும்படி கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/177&oldid=854287" இலிருந்து மீள்விக்கப்பட்டது