பக்கம்:மன ஊஞ்சல்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மன ஊஞ்சல் அவ்வாறே தங்கமும் வேலைக்காரியும் கிளம்பினார்கள். தங்கம் அந்த மாளிகை முழுவதும் ஒவ்வோரிடமாகப் பார்த்துக் கொண்டே போனாள். அந்த மாளிகையைப் பார்க்கப் பார்க்க அவளுக்குத் தான் முற்றிலும் புதுமையான ஒருலகத்தில் இருப்பதுபோலவே தோன்றியது. தரைமுழுவதும் கருப்பும் வெள்ளையுமான சதுர வடிவமுள்ள பளிங்குக்கற்கள் பதித்து வழவழவென்று விளங்கியது. கரும்பளிங்குத் தூண் கள் ஒவ்வொன்றும் பிருமாண்டமாக இருந்தன சுவர்கள் எல்லாம், வண்ணப் பளிங்குக் கற்களால் ஒளி பொருந்தித் திகழ்ந்தன. சுவர்களின் உச்சியில் வரிசையுறப் பல் வண்ணங் குழைத்துத் தீட்டிய ஓவியப் படங்கள் இருந்தன. கூடங்களில் உச்சித்தளத்திலிருந்து குளோப்புகளும் ரசக் குண்டுகளும் தொங்கிக் கொண்டிருந்தன. அறைகளுக்கும் கூடங்களுக்கும் நுழைவாயிலில் இருந்த மரக்கதவுகள் மிகப் பருத்தனவாகவும் சிற்பவேலைச் சிறப்பு மிக்கனவாகவும் இருந்தன. மாளிகையின் மேல் தளத்தில் பெரிய பெரிய கூடங்கள் இருந்தன. அவற்றின் தரைப்பகுதி மட்டும் மரத்தாலாகியிருந்தது, சுவர்கள் எல்லாம் பளிங்குமயமாகவே இ ரு ந் த ன . தோட்டத்துக் காற்று சிலு சிலுவென்று அங்கே வீசிக் கொண்டிருந்தது. பிறகு தங்கம் தோட்டத்திற்குப் போனாள். அங்கு வேப்ப மரங்களடர்ந்து நல்ல நிழல் கொடுத்துக் கொண் டிருந்தன. தோட்டத்தில் ஆங்காங்கே பலவிதமான பூஞ்செடி களும் சீமைக் குராட்டன்ஸ் செடிகளும் வரிசையுற வைக்கப் பட்டிருந்தன. சில குரோட்டன்ஸ் செடிகள் அடர்த்தியாக இருந்தன. அவை பலவிதமாத உருவங்கள் பெறும்படியாகக் கத்திரித்து விடப்பட்டிருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய தோட்டத்தில் ஒரு மல்லிகைச் செடி கூட இல்லை, பின்னால் பெரியம்மாவைப் பார்க்கும்போது தங்கம் இந்தக் குறையைச் சொன்னாள், அதற்கு ஜமீந்தாரிணி அம்மாள் 'உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/178&oldid=854288" இலிருந்து மீள்விக்கப்பட்டது