பக்கம்:மன ஊஞ்சல்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

国缸 ஊஞ்சல் 19. இரவில் கேட்ட ஓசை. அண்ணாமலைப் பண்டிதர் கேட்ட கேள்வியின் பொருள் தெரியாமல் திகைத்து நின்றுகொண்டிருந்த தங்கத்தை நோக்கி அவர் மறுபடியும் கேட்டார், 'தங்கம் உனக்கு இந்த மாளிகை பிடித்திருக்கிறதல்லவா? இதுவே உன் சொந்த மாளிகையாக இருந்தால்-உனக்கே உரிய மாளிகையாக இருந்தால் நல்லதல்லவா?’ என்று கேட்டார். "நான் அதைப்பற்றிக் கற்பனை செய்து பார்க்கக்கூட அருகதையற்றவள்! எனக்கெதற்கு இதெல்லாம். அரச பரம் பரையிலே பிறந்தவர்களுக்கும், செல்வக்குடியிலே சிறந்திருப் பவர்களுக்கும்தான் அந்த எண்ண மெல்லாம் ஏற்பட வேண்டும். என்னைப் போன்றவர்கள். இருக்கின்ற இடத்தில் ஒழுங்காக இருந்தால் போதும். இந்த மாளிகை வாச மெல்லாம் எனக்குத் தேவையில்லை.” என்று தங்கம் மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள். தன் மனத்தில் ஒடிய எண்ணங்களை அவள் வாய்விட்டுச் சொல்லவில்லை, அண்ணாமலைப் பண்டிதரின் எதிரில் அவ்வளவு துடுக்காகப் பேசக்கூடிய தைரியம் அவளுக்கு எழவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அண்ணாமலைப் பண்டிதர் அவள் நெஞ்சிலோடிய அந்த எண்ணங்களை அப்படியே அறிந்துகொண்டார். அனுபவ மிகுந்த அவருடைய கூரிய கண்கள், அவள் இதயத்தினுள் நடைபெற்ற எண்ண ஒட்டத்தை வெகு துல்லிதமாகக் கணக்கிட்டு விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/180&oldid=854291" இலிருந்து மீள்விக்கப்பட்டது