பக்கம்:மன ஊஞ்சல்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன வஞ்சல் 171 'தங்கம், திருமணமே ஆக வழியில்லாத பெண்ணுக்கு மாளிகை வாசத்திலே ஆசை எப்படி ஏற்படும்? என்று தானே சிந்திக்கிறாய்?" என்று கேட்டார் பண்டிதர். ஆம் என்று ஒப்புக்கொள்வதுபோல் தங்கம் பேசாமலிருந் தாள். 'மகளே. தகுதிக்கு மீறிய சிந்தனைகள் கூடாதென்று எண்ணியவர்கள் கோடானு கோடியாய் வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாய்ப் போயிருக்கிறார்களே யல்லாமல் சிறந்து விளங்கினார்கள் என்று சொல்வதற்கில்லை. "பேராசை பெரு நஷ்டம் என்று கதைகள் சொல்லிச் சொல்லிக் சருத்துக் குருடர்களாய், வாழ்வில் வசதியற் றோராய் வாழ்ந்து மாண்டவர்கள் கோடி கோடி. ஆனால், உயர்வான எண்ணங் கொண்டவர்களும், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற நெறியில் நின்றவர்களும் தான் வாழ் விலே முன்னேறி யிருக்கிறார்கள். இந்த வையகம் புகழும் அளவு, அவர்களுடைய சிறப்புப் பொலிந்து விளங்கி யிருக் கிறது. 'மகளே, இறக்கையா நமக்கிருக்கிறது? நம்மால்.எப்படிப் பறக்க முடியும் என்று எண்ணிக்கொண்டிருந்தவன் இன்னும் பெருச்சாளி வாகனத்தைத் தான் சுமந்துகொண்டு ஊரைச் சுற்றி வருகிறான். இறக்கையில்லாவிட்டால் என்ன, இந்த வையகத்துக்கும் மேலேயுள்ள வெட்ட வெளியில் பறந்து பார்ப்போம் என்று முயன்றவர்களின் பரம்பரை இன்று உலகத்தையே சுற்றி வருகிறது. உலகத்தை மட்டுமல்ல, மற்ற அண்டகோளங்களுக்கும் போய் வரவேண்டுமென்ற ஆசை மனிதனுக்கு உண்டாகியிருக்கிறது. பெண்ணே, இந்த ஆசை யெல்லாம் பேராசை யென்று மனிதன் ஒதுக்கித் தள்ளியிருந்: தால் இன்று இவ்வளவு தூரம் முன்னேறியிருக்க முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/181&oldid=854292" இலிருந்து மீள்விக்கப்பட்டது