பக்கம்:மன ஊஞ்சல்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மன ஊஞ்சல் என்று புரட்சி முரசுகொட்டும் இளைஞர்களைப் போல் பேசினார் பண்டிதர். 'அதற்காக நான் மாளிகை வாசியாக வேண்டுமென்று ஆசைப்படச் சொல்கிறீர்களா?' என்று துணிந்து வாய் திறந்து கேட்டு விட்டாள் தங்கம். 'ஆசைப்பட வேண்டாம், தங்கம். ஆனால், அந்த மாளிகை வாசம் தானாக உன்னைத் தேடி வந்தால் அதை நீ ஒதுக்கித் தள்ளாமலாவது இருப்பாயல்லவா?’’ என்று கேட்டார். தங்கம் அவரை நிமிர்ந்து நோக்கினாள். அண்ணாமலைப் பண்டிதர் ஏதோ புதிர் போடுகிறார் என்று அவளுக்குத் தெரிந்தது. ஆனால், அதன் பொருளை அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவள் குழப்பமான நிலையில் நின்று கொண்டிருந்தாள். 'தங்கம், நான் நினைத்தால் உ ன் ைன இந்த மாளிகைக்கே அரசியாக்கி விடுவேன், நீ சம்மதமென்றால் போதும் என்று மற்றுமொரு வெடிகுண்டைத் தாக்கிப் போட்டுவிட்டுப் போனார் அண்ணாமலைப் பண்டிதர், அவர் மரஞ் செடிகளுக்கிடையில்ே நுழைந்து மாளிகையை நோக்கிச் சென்றார். சென்றுகொண்டிருந்த அவரையே பார்த்துக்கொண்டு குழம்பிய சிந்தனையோடு நின்று கொண்டிருந்தாள் தங்கம். பாவம் தங்கம்! வயதுப் பெண்ணான அவளுக்கு மனத்தில் எவ்விதமான சலனமும் இன்றி அமைதியாக இருந்தோமென்ற நிம்மதியே கிடையாது. எங்கே போனாலும் எப்படியாவது ஏதாவது ஒரு புதுப் பிரச்சினை வந்து அவள் உள்ளத்தை அலைமோதவைத்துவிடுவதே இயல்பாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/182&oldid=854293" இலிருந்து மீள்விக்கப்பட்டது