பக்கம்:மன ஊஞ்சல்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 173 விட்டது. சிலசமயம், தங்கம்தான் பிற ந் த வே ைள சரியில்லையோ என்றுகூட எண்ணிக் கொள்ளுவாள். பிறகு அது மூட மதியினரின் எண்ணம் என்று அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ள முயலுவாள். மாளிகையின் அழகையும், கவர்ச்சியையும், உயர்வையும் சிறப்பையும் கண்டு மகிழ்ச்சியடைந்தாள் தங்கம். எந்தப் பொருளும் சிறந்த பொருளாக இருந்தால், அது யாருடைய பொருளாக இருந்தாலும் அதைக் கண்ட அளவானே ஒர் இன்பம் பிறக்கிறது. செவ்விய உடலும் கவர்ச்சியான தோற்றமும், குறுகுறுக்கும் விழிகளும், துருதுருப்பான இயக்கமும், கற்கண்டு மழலையும் பொருந்திய சிறு குழந்தை களைக் கண்டால் அவற்றைக் கண்ட மாத்திரத்தானே தூக்கி வைத்துக் கொண்டு அவற்றுடன் உரையாட வேண்டும் என்ற எண்ணம்தோன்றும்-அவற்றின் செக்கச் சிவந்த கன்னத்திலே முத்தமிட்டுச் சித்தங் குளிர வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்தக் குழந்தைகளை ஒருமுறையாவது தோனில் தூக்கிவைத்துக் கொள்ளவேண்டும் என்று ஆசை தோன்றும். இவ்வளவு தோன்றாவிட்டாலும், அவை துருதுருவென்று அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கவாவது ஆசை யுண்டாகும். அந்தக் குழந்தை யாருடைய குழந்தை. அதன் பிறப்பென்ன, வளர்ப்பென்ன என்றெல்லாப் நினைக்கத் தோன்றுவதில்லை. அதுபோலவே தான் அழகான இயற்கைக் காட்சி எதையாவது கண்டால் அதையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்போல் ஓர் ஆசை மனத்தகத்தே எழுதுவதுண்டு. அதற்காக அந்த இயற்கைக் காட்சியை எ ப் .ெ பா ழு து ம் நிலையானதாகத் தன் வீட்டினுள்ளே கொண்டுவந்து விடவேண்டு மென்று எண்ணினால் முடியுமா? வேண்டுமானால், கைதேர்ந்த ஒவியன் அப்படிச் செய்ய முடியும் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/183&oldid=854294" இலிருந்து மீள்விக்கப்பட்டது