பக்கம்:மன ஊஞ்சல்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மன ஊஞ்சல் தங்கம் அந்த மாளிகையின் அழகைக் கண்டு தன்னகத்தே கொண்ட மகிழ்ச்சி, காட்சியளவால் பெற்ற இன்பத்தினால் ஏற்பட்டதுதான். அந்த மகிழ்ச்சியோடு அவள் தோட்டத்துக் குளிர் தென்றலையும் நிழலையும் சற்று நேரம் அனுபவித்து இன்பமாக இருக்கலாம் என்று வந்தாள். ஆனால், அண்ணா மலைப் பண்டிதர் சொன்ன செய்திகள் அவளை அந்த இன்பங் களை அனுபவிக்க விடாமல், உள்ளத்தைச் சிந்தனைப் பாதையிலே திருப்பி விடுவதாக அமைந்துவிட்டன. அண்ணாமலைப் பண்டிதர் என்ன கருத்தோடு அவ்வாறு சொன்னர் என்று எண்ணிப் பார்த்தாள். "மாளிகையாவது, தனக்குச் சொந்தமாவதாவது! அது கனவிலும் நடக்கக்கூடிய காரியமல்ல!" என்று தான் அவளுக்குத் தோன்றியது, மாளிகைக்கு உரியவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். அவர்கள் இறந்த பின் தனக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றால் அவள் அவர் களின் உறவுக்காரியும் அல்ல. அவர்களுக்குப் பிள்ளையிருக் கிறதா இல்லையா என்பதும் அவளுக்குத் தெரியாது. அப்படியே பிள்ளை யில்லாதவர்களாய் இருந்தாலும், அவர்களுடைய தத்துப் பிள்ளைகளாய் வரலாமென்று ஆண் பிள்ளைகள் அதிலும் சொந்தக்காரப் பிள்ளைகள் எதிர்பார்ப் பதிலே பொருள் உண்டு. தான் ஒரு பெண்பிள்ளை: அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? என்றெல்லாம் பற்பலவாறு எண்ணிக் குழம்பினாள் தங்கம். - நேரம் பாடு போய்க்கொண்டிருந்தது. பணிப்பெண் ஒருத்தி தங்கத்தைத் தேடி வந்தாள், சிற்றுண்டி யருந்த அழைப்பதற்காக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/184&oldid=854295" இலிருந்து மீள்விக்கப்பட்டது