பக்கம்:மன ஊஞ்சல்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 175 தங்கம் கூடத்தினுள் நுழைந்த போது, கூடத்தின் மத்தியில் விரித்திருந்த அழகான இரத்தினக் கம்பள விரிப்பின் மீது ஜமீந்தார் கருணாகரர், அண்ணாமலைப் பண்டிதர் பெரியம்மா மூவரும் அமர்ந்திருந்தார்கள். ஜமீந்தாரின் முன்னால் வெல்வெட்டு உரையினால் முடிய சிறு சிறு மரப் பெட்டிகள் இரண்டு முன்று இருந்தன. அவற்றைப் பார்த்த உடனே அவை நகைப் பெட்டிகள் என்று தெரிந்துகொள்ள முடிந்தது. ஏதோ நகைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தங்கம் எண்ணிக்கொண்டு தூரத்திலேயே நின்றாள். அவள் கூடத்து வாசலில் நுழைந்தவுடனேயே நிமிர்ந்து பார்த்த ஜமீந்தார், 'வாம்மா. தங்கம் வா! உன்னைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்!' என்று வரவேற்றார். தங்கம், அருகில் நெருங்கிச் சென்று ஒதுங்கி நின்று கொண்டாள். - "தங்கம், இங்கே வா!' என்று ஜமீந்தாரிணி யம்மாள் அவளை அழைத்துத் தன்னருகில் விரிப்பின்மீது வந்து அமரச் சொல்லி யழைத்தாள். தங்கம் தட்டமாட்டாமல் அருகே போய் அமர்ந்தாள். ஜமீந்தார், நகைப்பெட்டி ஒன்றினுள்ளிருந்து வைர வடச் சங்கிலி ஒன்றை எடுத்து, 'இந்தா, தங்கம்! இதை உன் கழுத்தில் அணிந்துகொள்', என்றார். w தங்கம் வெறித்துப் பார்த்தாள். அவர்கள் செயல் அவளுக்குப் புரியாததாயிருந்தது. 'தங்கம்! போய் வாங்கிக் கொள்ளம்மா!' என்று பெரியம்மா பக்கத்திலிருந்து வலியுறுத்திக் கூறினாள். ஜமீந்தார் வீடென்றால் என்ன, தங்கமும் வைரமும் சுண்டல்போலவா அள்ளிக் கொடுப்பார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/185&oldid=854296" இலிருந்து மீள்விக்கப்பட்டது