பக்கம்:மன ஊஞ்சல்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 'மன ஊஞ்சல் 'இல்லை, இதெல்லாம் எனக்கு அணிந்து பழக்கமில்லை. வேண்டாம்!” என்று குழறிக் குழறிக்கொண்டே தங்கம் பதில் கூறினாள். 'தங்கம், உனக்கு இதையெல்லாம் போட்டுப் பார்க்க வேண்டுமென்று எங்கள் ஆசை! எங்கள் ஆசையை நிறை வேற்றக் கூடாதா?’ என்று வேண்டுதலாகக் கூறினார் கருணாகர ஜமீந்தார். 'கண்ணல்ல! போட்டுக் காண்பியம்மா!’ என்று பெரியம்மா கூடப் பாடினாள். - அண்ணாமலைப் பண்டிதர் வாய் அசைக்கவே யில்லை. 'பண்டிதரே! நீங்கள் கொஞ்சம் இந்தப் பெண்ணுக்குச் சொல்லக் கூடாதா?’ என்று கேட்டார் ஜமீந்தார். 'தங்கம், அவர்கள் ஆசையைத் தான் நிறைவேற்றி வையேன்! பெரியவர்கள் இவ்வளவு வேண்டுகிறார்கள்சும்மா யிருக்கிறாயே!' என்று அண்ணாமலைப் பண்டிதர் கூறினார். கடைசியில் தங்கம் மறுக்க முடியாமல் அந்த வைர வடச் சங்கிலியை எடுத்துக் கழுத்தில் அணிந்துகொண்டாள். உடனே கருணாகர ஜமீந்தாரும் ஜமீந்தாரிணி யம்மாளும் ஆகா! என்ன அழகு! என்ன அழகு! இவளுக்கும் இந்த வைர மாலைக்கும் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!’ என்று பாராட்டிப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அந்தக் கூடத்தின் கோடியில் ஒரு நீண்ட பெரிய சுவர்க்கண்ணாடி விருந்தது. ஜமீந்தாரினியம்மாள் தங்கத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் அந்தக் கண்ணாடியின் முன்னால் நிறுத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/186&oldid=854297" இலிருந்து மீள்விக்கப்பட்டது