பக்கம்:மன ஊஞ்சல்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 177 "பார்த்தாயா தங்கம் இந்த வைர வடமாலையைப் போட்டதும் எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்று பாராட்டிப் பேசினாள். தங்கம், தன் முல்லைப்பற்கள் தெரிய ஒரு சின்னச் சிரிப்புச் சிரித்தாள். உண்மையிலேயே அந்த வைர வடமாலையைத் தன் கழுத்திலே யணிந்த பின் தனியழகு ஒன்று தனக்குப் புதிதாக ஏற்பட்டிருப்பது போல்தான் தங்கத்திற்குத் தோன்றியது. வைத்த கண்வாங்காமல் நிலைக் கண்ணாடியில் தோன்றிய தன் புத்தழகு உருவத்தை அவள் பார்த்துக்கொண்டு நின்றாள். - 'தங்கம் உனக்கு இது நல்லாப் பொருத்தமாயிருக்கு: இதை நீயே வைத்துக்கொள்' என்றாள் ஜமீந்தாரிணி பெரியம்மாள். அவ்வளவுதான் தங்கம், தன் கழுத்தில் இருந்த வைர வடச்சங்கிலியைச் சட்டென்று கழற்றினாள்; விருட்டென்று திரும்பி வந்தாள். கருணாகரர் முன்னால் இருந்த ஒரு மரப் பெட்டியைத் திறந்து அதில் வைத்துப் படக்கென்று மூடினாள். அந்தப் பெட்டியை அவர் எதிரே வைத்துவிட்டுப் பின் வாங்கி நின்றுகொண்டாள். அவள் முகம்.உம்மென்றிருந்தது. சிவ்வென்று சிவந்து போயிருந்தது. அவள் கோபங் கொண்டிருக்கிறாள் என்பதை எல்லோரும் கண்டுகொண்டார்கள். - ஜமீந்தார் கருணாகரர் அவளுடைய கோபத்தைக் கண்டு வருத்தப்பட்டவர் போல், நகைப் பெட்டிகளை மூடி வைத்தார். அவற்றையெல்லாம் இருப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு எழுந்திருந்தார். அவர் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கிச் செல்ல, அண்ணாமலைப் பண்டிதரும் பின் தொடர்ந்தார். up—12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/187&oldid=854298" இலிருந்து மீள்விக்கப்பட்டது