பக்கம்:மன ஊஞ்சல்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மன ஊஞ்சல் ஜமீந்தாரிணி பெரியம்மாள் தங்கத்தின் அருகில் வந்து 'தங்கம், கோபமா? " என்று கெஞ்சுதலாகக் கேட்டுஅணைவாகப் பிடித்து, "உனக்குப் பிடிக்கவில்லையென்றால், நான் இனிமேல் அந்தமாதிரி செய்ய மாட்டேனம்மா! வா, இப்போது சாப்பிடப் போகலாம்' என்று தயவாக அழைத்தாள். "நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே. சீரொழுகு சான்றோர் சினம்' என்று ஒரு பழம்பாடல் கூறுகிறது. ஜமீந்தாரிணியம்மாளின் தயவான வார்த்தைகளைக் கேட்டவுடன் தங்கத்தின் கோபம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது. பிறகு இருவரும் சிற்றுண்டி யருந்தப் போனார்கள். சிறிதுநேரத்திற்கு முன் தான் வயிறு நிறையச் சாப்பிட்ட படியாலும், பசியில்லாததாலும், மாலையில் சிற்றுண்டி உண்டு பழக்கமில்லையாகையாலும் தங்கத்தால் நன்றாகத் தயாரிக்கப்பட்டிருந்த அந்தச் சிற்றுண்டியைச் சுவைத்துச் சாப்பிட முடியவில்லை. அவளுக்கு அப்போது சிற்றுண்டியின் மீது விருப்பம் எழவில்லையானாலும், எங்கே தான் இன்னும் கோபமாக இருப்பதாக நினைத்து மற்றவர்கள் வருத்தப் படுவார்களோ என்று பயந்து மற்றவர்களைப்போலவே அதைச் சாப்பிடலானாள். சிற்றுண்டியுண்டு காப்பி குடித்து வெற்றிலை போட்டுக் கொண்ட பிறகு, அண்ணாமலைப் பண்டிதர் ஜமீந்தாரிடம் விடைபெற்றுக் கொண்டார். தங்கமும் கருணாகரரிடமும், பெரியம்மாளிடமும் விடை பெற்றுக் கொண்டாள். பண்டிதரும், தங்கமும் ஜமீந்தார் வீட்டார் பின் தொடர வெளியில் வந்தபோது, அங்கு அவர்கள் வந்த மாட்டுவண்டி பூட்டித் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அந்த வண்டியைக் கண்டவுடன், மறுபடியும் தான் தான் அதை ஒட்டிச் செல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/188&oldid=854299" இலிருந்து மீள்விக்கப்பட்டது