பக்கம்:மன ஊஞ்சல்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 179 வேண்டுமோ என்று மனஞ்சலித்துக் கொண்டாள் தங்கம். ஆனால், நல்லவேளையாக, "கருப்பா, ஐயாவைப் போய் இறக்கிவிட்டு விட்டு வா! என்று ஜமீந்தார் தம் வேலைக் காரனுக்கு அப்போது உத்தரவு கொடுத்தார், தங்கம் மனம் அமைதியடைந்தது. அவள் வண்டியில் ஏறி உட்கார்ந்த பிறகு ஏதோ சிறையிலிருந்து விடுபட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அண்ணாமலைப் பண்டிதரும் கருப்பனும் வண்டியில் ஏறியபின் வண்டி புறப்படப் போகுமுன் ஜமீந்தாரிணி பெரியம்மாள். 'தங்கம், அடிக்கடி இங்கு வாம்மா! ' என்று கூவினாள். தங்கத்திற்கு திரும்ப அங்கு வர நோக்கம் இல்லையானாலும், “சரி” என்று தலையை யாட்டினாள். 'வருகிறேன்' என்று வாய்விட்டுச் சொன்னாள். வண்டி புறப்பட்டது. வண்டி ஒடிக் கொண்டிருக்கும் போது வழியில் அண்ணாமலைப் பண்டிதர் தங்கத்திடம் எதுவும் பேசவில்லை. கருப்பன் அவர்களை நெய்யூரில் கந்தசாமி வாத்தியார் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வண்டியைத் திருப்பிக்கொண்டு போய் விட்டான். வண்டியிலிருந்து இறங்கிய அண்ணாமலைப் பண்டிதர், கால் முகம் கழுவி விட்டு நேராக மாடியில் உள்ள தம் அறைக்குச் சென்று விட்டார், தங்கம், நேராக அடுக்களைக் கட்டிற்குச் சென்று தன் தாயைச் சந்தித்தாள். மரகத அம்மாள் அப்போது, பருப்புப் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அதாவது பருப்பிலிருந்து கல் முதலிய வற்றை எடுத்தகற்றிக் கொண்டிருந்தாள். அவசரமாக வந்து நுழைந்த தங்கத்தைக் கண்டவுடன் அவள் ஏதோ தன்னிடம் சொல்ல விருப்புடையவளாய் இருக்கிறாள் என்பதை அறிந்துகொண்ட மரகத அம்மாள், 'வா, தங்கம்! இப்போதுதான் வந்தாயா? இந்தப் பருப்பைக் கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/189&oldid=854300" இலிருந்து மீள்விக்கப்பட்டது