பக்கம்:மன ஊஞ்சல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ህዕ6ቮ: ஊஞ்சல் 2. அரும்பு திருட வந்த அழகன் மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து கூடத் தங்கத்திற்கு அந்தக் குழப்பான சிந்தனை மாறாமலேயிருந்தது. வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபடியால் ஓரளவு அதைப்பற்றி நினைத்துக் கவலைப்படாமல் இருந்தாள். ஆனால், பெரும் பாலும் வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து, சாயுங்காலம் துணிமணிகளைத் துவைத்துப்போட்டுவிட்டுத் தோட்டத்துப் பக்கம் இருந்த சன்னல் கதவண்டைபோய் உட்கார்ந்தபோது தங்கத்தின் எண்ணங்கள் மீண்டும் தன் தந்தை தன்னிடம் சொல்லத் தயங்கிய திருமணச் செய்தியைச் சுற்றிச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தன. கந்தசாமி வாத்தியார் அன்று கார்த்திகையானதால், பள்ளிக்கூடம் விட்டதும் நேரே கோயிலுக்குப்போய்த் தீபாராதனை பார்த்து விட்டு வெகுநேரம் கழித்துத்தான் வருவார். கந்தசாமி வாத்தியார் சில ச ம ய ங் க ளி ேல சீர்திருத்தவாதிபோலப் பேசுவார் என்றாலும் அவருக்கு இந்த மாதிரியான பூசை, ஆராதனை, நாள் நட்சத்திரம் ஆகியவற்றிலே உள்ளுற நம்பிக்கை புண்டு. பத்திரிகை வாங்கினால் “இன்று நாளை சோசியம்’ என்ற பகுதியைத் தான் முதலிலே படித்துப் பார்ப்பார். முக்கியமான தினங் களிலே கோயிலுக்குப் போகத் தவறமாட்டார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/19&oldid=854301" இலிருந்து மீள்விக்கப்பட்டது