பக்கம்:மன ஊஞ்சல்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மன ஊஞ்சல் பொறுக்கு! ' என்று சொன்னாள். தங்கம் உட்கார்ந்து பருப்புப் பொறுக்க ஆரம்பித்தாள். தான் வண்டியோட்டிச் கொண்டு போனதைப்பற்றிக் குறைப்பட்டு ஏதாவது சொல்லுவாள் தங்கம் என்று எதிர்பார்த்தாள் மரகத அம்மாள். ஆனால் அவள் கேட்டதெல்லம் புதுமையா யிருந்தது! ஜமீந்தார் வீட்டில் தான் போய் இறங்கியது முதல் திரும்ப வண்டியேறியது வரை, ஒரு சிறு நிகழ்ச்சிகூட விட்டுப் போகாமல் சொல்லி முடித்தாள் தங்கம். அத்துடன் நில்லாமல், 'அம்மா! பண்டிதர் ஏதோ திட்டம் போட்டு வேலை செய்வதுபோல் இருக்கிறதம்மா! எல்லாம் மர்மமாக இருக்கிறது!’ என்று ஒரு வரியும் சேர்த்துக் கூறினாள். மரகத அம்மாளுக்கும், அப்படித்தான் தோன்றியது. 'தங்கம், பண்டிதர் நல்லவர். அவர் எது செய்தாலும் நமது நன்மைக்குச் செய்வாரேயொழிய வேறு காரணமாகச் செய்ய மாட்டார்' என்று தன் மகளிடம் சொன்னாள். இந்தச் சொற்கள் தங்கத்தின் மனத்தில் ஆழமாகப் பதிந்தன. அண்ணாமலைப் பண்டிதர் தீயவர் என்று அவள் ஒரு கணம் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், அவர் ஏன் எல்லாச் செயல்களையும் மர்மம் என்று படும்படியாகச் செய்கிறார் என்று அவளுக்குப் புரியவில்லை. இவ்வளவு நல்ல மனிதர் வெளிப்படையாகத் தோன்றும்படி ஏன் எந்தச் செயலையும் செய்யவில்லை என்று அவள் எண்ணினாள். ஆனால் அவள் தன் எண்ணத்தை வெளிப்படுத்தவில்லை. ஆரம்பத்தில் எல்லாம் அண்ணாமலைப் பண்டிதருக்கும் சுந்தரேசனுக்கும் என்ன தொடர்பு அல்லது பகை என்ன என்று தெரியாமல் குழம்பிய தங்கம், அவர் நடராசன்மீது அக்கறை காட்டியபோதெல்லாம், அவருக்கும் நடராசனுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/190&oldid=854302" இலிருந்து மீள்விக்கப்பட்டது