பக்கம்:மன ஊஞ்சல்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 181 என்ன உறவு என்று தெரியாமல் வியந்த தங்கம், இப்போது இந்த ஜமீந்தார் வீட்டுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு அல்லது உறவு என்று தெரியாமல் கலங்கினாள். மரகத அம்மாளுக்கும் இப்ப்டிப்பட்ட சந்தேகங்கள் இருந்தாலும் அவள் அண்ணாமலைப் பண்டிதரிடம் தன்னை யறியாமல் வைத்திருந்த பெருமதிப்பு அவர் செயலில் சூது இருக்கும் என்று எண்ண இடங்கொடுக்கவில்லை ஒளிவு மறைவு இருக்கிறதென்றாலும் சூழ்ச்சி வஞ்சம் அதிலே இருக்காதென்று நிச்சயமாக நம்பினாள். அதனால்தான் அவள் தன் மகளிடம் அவர் தங்களுக்கு நன்மையே செய்வார் என்று வலிதாகக் கூறினாள். அன்று இரவு உண்ட பின் எல்லோரும் உறங்கச் சென்றார்கள். ஆனால், தங்கத்துக்கு என்னவோ இரவு முழுவதும் சரியாக உறக்கம் வரவேயில்லை. ஜமீந்தார் வீட்டில் நிகழ்ந்த சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்தன. ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு தடவையும் அவள் ஒவ்வொரு பொருள் கற்பித்துக்கொண்டு இன்ன முடிவுக்கு வருவதென்று தெரியாமல் கலங்கிக் கொண்டிருந்தாள். ஆகவே தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். நள்ளிரவு நேரம் எல்லோரும் நன்றாக உறங்கிக் கொண் டிருந்தார்கள், தங்கத்தைத் தவிர வீடு முழுவதும் எவ் விதமான ஓசையுமில்லாமல் இருந்தது. சிந்தனை வயப்பட்டுக் குழம்பிய நிலையில் புரண்டு கொண்டிருந்த தங்கம், தன் சிந்தனையை மறந்து ஒரு விஷயத்தைக் கவனிக்கும்படியாக நேர்ந்தது. அதற்கு அவள் காதிலே பட்ட ஒரு வகை ஓசைதான் காரணம் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/191&oldid=854303" இலிருந்து மீள்விக்கப்பட்டது