பக்கம்:மன ஊஞ்சல்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lዕ6ï ஊஞ்சல் 20. பூட்டிக் கிடந்த மாளிகை யாரோ வீட்டினுள் நடமாடிய சத்தம் கேட்டது. வெளி யில் சென்ற உருவமும் தெரிந்தது. ஆனால், தெருக்கதவு திறந்த சத்தமோ சாத்திய சத்தமோ கேட்காததனால் கதவு எப்படி யிருக்கிறது என்று பார்த்துவர வேண்டுமென்று தங்கத்திற்குத் தோன்றியது. ஆனால் சென்று பார்க்க அச்ச மாகவும் இருந்தது. கடைசியில் ஒருவாறு மனத்தைத் திடப் படுத்திக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள். கதவை நோக்கிச் சென்றான். மின் விளக்கைத் தட்டி விட்டாள். கதவு உட்புறம் தாழிட்டபடியே இருந்தது. 'வெறும் மனத்தோற்றம்’ என்று மனத்திற்குள் எண்ணிக்கொண்டு விளக்கை யணைத்துவிட்டுத் தன் அறைக்குத் திரும்பினாள். படுக்கையில் அவள் சாய்ந்த மறுகணம், மீண்டும் யாரோ வீட்டிற்குள் நடமாடுவதுபோலவும் மாடி நோக்கிச் செல்வது போலவும் ஓசை கேட்டது. தங்கம் கூர்ந்து கவனித்தாள். அதற்குப் பிறகு ஓசையே எழவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/193&oldid=854305" இலிருந்து மீள்விக்கப்பட்டது