பக்கம்:மன ஊஞ்சல்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மன ஊஞ்சல் 'பொல்லாத மனம்!’ என்று நினைத்துக்கொண்டே, போர்வையை இழுத்து மூடிக்கொண்டு துரங்க முயன்றாள். ஆனால் துரக்கம் வரவில்லை. மீண்டும் ஜமீந்தார் மாளிகை எண்ணங்கள் அவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டன. පුං H O இவ்வளவு நாளும் அண்ணாமலைப் பண்டிதர் கந்தசாமி வாத்தியாரின் வீட்டில் தங்கியிருந்தார். இடையிடையே கதலிப்பட்டணம் போய்வந்தார். இப்போது திடீர் என்று ஒரு நாள்.அவர்தான் சென்னைக்குப் போய் வரவேண்டிய வேலை யிருக்கிறதென்றுசொன்னார்.இதைக் கேட்டதும் கந்தசாமிப் பண்டிதர் அதிர்ந்துபோனார். யார்மீதும் பண்டிதருக்குக் கோபமோ என்றுகூட அவர் எண்ணி அதைக் கேட்கவும் முடி யாமல் தத்தளித்தார், ஆனால், அண்ணாமலைப் பண்டிதர் தாம் ஒர் அவசர வேலையாகப் போக வேண்டியிருக்கிற தென்றும், போய் அந்த வேலையை முடித்துக்கொண்டு வந்து தகவல் தெரிவிப்பதாகவும், திரும்பிவர நான்கைந்து நாட்கள் ஆகுமென்றும் தெரிவித்தபடியால், உண்மையாகவே ஏதோ வேலையாகத்தான் போகிறார் என்று நம்பிக்கை கொண்டார் கந்தசாமி வாத்தியார். அண்ணாமலைப் பண்டிதர் சென்னைக்குப் புறப்படுகிற அன்று கதலிப் பட்டணம் ஜமீன்தாருடைய மாட்டு வண்டி வரவில்லை. அண்ணாமலைப் பண்டிதரும், கந்தசாமி வாத்தியாரும். முருகேச வாத்தியாருமாக வீட்டிலிருந்து புறப்பட்டு நெய்யூர் நடுத்தெருவுக்குச் சென்றார்கள். நெய்யூர் நடுத்தெருதான் அயலூர்களை இணைத்துக் கொண்டு ஓடுகின்ற பெருந்தெரு. அதன் வழியாகத் தான் கதலிப்பட்டணம் போகின்ற பேருந்து வரும். அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/194&oldid=854306" இலிருந்து மீள்விக்கப்பட்டது