பக்கம்:மன ஊஞ்சல்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் . 185 பேருந்தில் ஏறிக்கொண்டால், நேராகக் கதலிப்பட்டணம் புகைவண்டி நிலையத்தில் போய் இறங்கிக்கொள்ளலாம். நடுத்தெருவிலே போய் நின்றதும், அண்ணாமலைப் பண்டிதரைப் பார்த்து அறிமுகமாகி யிருந்தவர்களும், அறி முகமே யாகாதவர்களும், அந்த ஊர் மக்கள் பலர் நெருங்கி வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக் கொண்டிருந் தார்கள். இப்படியாகப் பொழுது போய்க் கொண்டிருந்தபோது, பேருந்து வந்துவிட்டது அங்கே வழக்கமாக நிற்கின்றஇடத்தில் பேருந்து வந்து நின்றவுடன் 'சரி கந்தசாமி! முருகேசர்! நான் போய்வருகிறேன். உங்கள் அன்புறவை விட்டுப் பிரிந்து போவது எனக்கும் ஏதோ மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால், காலத்தின் கட்டளைகளை நாம் மீறமுடியாது! உங்கள் அன்புக்கு நன்றி. வீட்டில் எல்லோருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரியுங்கள்!' என்று கூறிவிட்டு அண்ணாமலைப் பண்டிதர் பேருந்தை நோக்கி நடந்தார். அவர் பேச்சை நோக்கும்போது அவர் தங்களையெல்லாம் விட்டு நெடுநாள் பிரிந்திருக்கப்போவது போல் பேசுவதாகத் தான் தோன்றியது. கந்தசாமிப் பண்டிதருக்குத் தன் அகத்துக்குள் இந்த உணர்ச்சி தோன்றாமல் இல்லை. அவர் ஏதோ இழக்கத் தகாத பொருள் ஒன்றை இழப்பதுபோன்ற உணர்ச்சியுடன் அண்ணாமலைப் பண்டிதரை நோக்கினார். 'கந்தசாமி! வருந்தாதே, விரைவில் திரும்பிவந்து விடுவேன்!” என்று ஆறுதல் கூறினார் பண்டிதர். அவர் கூறிய ஆறுதல் மொழி. அதன் பாவம் ஏதோ தன்னைச் சமாதானப் படுத்துவதற்காகக் கூறியதாகத் தோன்றியதே தவிரக் கந்தசாமி வாத்தியாருக்கு உண்மையானதாகப் பட வில்லை. கந்தசாமி வாத்தியாரின் துயரந் தோய்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/195&oldid=854307" இலிருந்து மீள்விக்கப்பட்டது