பக்கம்:மன ஊஞ்சல்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மன ஊஞ்சல் முகத்தைக் கண்ட அண்ணாமலைப் பண்டிதர், அவர் தம் மிடம் எவ்வளவு ஆழ்ந்த பற்றுதல் வைத்திருக்கிறார் என்பதை நன்றாக உணர்ந்தார். ஆதலினால் தான் பச்சைப் பிள்ளைக்குச் சொல்வதுபோல் ஆறுதல் கூறினார். முருகேச வாத்தியாரும் வருத்தப்பட்டார் என்றாலும் கந்தசாமி வாத்தியார் அளவு இல்லை யென்றே சொல்லவேண்டும். அண்ணாமலைப் பண்டிதர் பேருந்தில் ஏறுகின்ற சமயம் முருகேச வாத்தியார் தாம் கையில் கொண்டு வந்திருந்த பையில் இருந்து ஒரு ரோஜாப் பூ மாலையை எடுத்துத் திடீ ரென்று அண்ணாமலைப் பண்டிதரின் கழுத்தில் போட்டார். உடனே பேருந்தில் இருந்த சிலரும் கீழே நின்றுகொண்டிருந்த சிலரும் கைதட்டி ஆரவாரித்தார்கள். 'இதெல்லாம் என்ன முருடிேசரே ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று பண்டிதர் கடிந்து கொண்டார். முருகேசர் அவர் கடித்து கொண்டதைப் பாராட்டாமல் முகத்தில் ஒரு புன்சிரிப்பைத் தேக்கிக் கொண்டு, "எங்களை யெல்லாம் மறந்து விடக்கூடாது!’ என்று கேட்டுக் கொண் டார். பண்டிதர் அதற்குப்பதில் சொல்லாமல், கந்தசாமி வாத்தியாரை நோக்கி, 'கந்தசாமி வீட்டில் எல்லோரிடமும் சொல்லு! தங்கத்தை எச்சரிக்கையாகப் பார்த்துக்கொள். உலகந் தெரியாத பெண்!” என்று சொன்னார். அவர் இந்த வார்த்தைகளைக் கூறி முடித்தவுடன் பேருந்து புறப்பட்டுவிட்டது. வெறிச் சென்ற உள்ளத்தோடு கந்தசாமி வாத்தியார் முருகேசரைப் பின் தொடர்ந்து திரும்பினார். பாதி வழியில் முருகேசரும் பிரிந்து போய்விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/196&oldid=854308" இலிருந்து மீள்விக்கப்பட்டது