பக்கம்:மன ஊஞ்சல்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 187 தன்னந் தனியாக வீட்டுக்குள்ளே நுழைந்த கந்தசாமி வாத்தியாருக்கு வீடே வெறிச்சென்று இருப்பதுபோல் தோன்றியது. எப்போதும் வீட்டிலேயே ஒடி ஆடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஒருநாளைக்கில்லா விட்டால் அந்த வீடு ஒன்று மில்லாத வீடுபோல் தோன்றுவது உண்டு. ஆனால் பேசாமல் தன் அறையிலேயே குந்திப் படித்துக் கொண்டு இருக்கக் கூடிய அந்தப் பேரிய மனிதர் இல்லாததே கந்தசாமி வாத்தியாருக்கு வெறிச்சென்றிருந்தது. மரகத அம்மாளும் கந்தசாமி வாத்தியாரைப் போலத் தான். ஏன் கொஞ்சம் அதிகமாகவே- அண்ணாமலைப் பண்டிதர் போவதை எண்ணி வருந்தினாள். ஆனால் எதை யும் பொறுத்துக் கொள்ளும் இதயம் படைத்தவள். ஆகவே அவள் தன் துன்பத்தை அவ்வளவு பெரிதாகக் காட்டிக் கொள்ளவில்லை. தங்கம், பண்டிதர் சென்றது பற்றி வருத்தப்படவில்லை என்றாலும் அவளுக்கும் என்னவோ போலத்தானிருந்தது. அண்ணாமலைப் பண்டிதர் சென்னைக்குப் புறப்பட்டுப் போய் ஐந்தாவது நாள் கந்தசாமிப் பண்டிதருக்கு ஒர் அஞ்ச லட்டை வந்தது. அண்ணாமலைப் பண்டிதர்தான் எழுதி யிருந்தார். கந்தசாமி, நலம் விளைக வந்த வேலை முடிந்தவுடன் திரும்பலா மென்று தான் எண்ணம், வேலை முடியவில்லை. தாமத மாகும் போல் இருக்கிறது. மரகதம் தங்கம் இருவருக்கும் என் வாழ்த்துக்கள், அன்பன், அண்ணாமலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/197&oldid=854309" இலிருந்து மீள்விக்கப்பட்டது