பக்கம்:மன ஊஞ்சல்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 மன ஊஞ்சல் இந்த அஞ்சலட்டைக்குப் பிறகு பண்டிதரிடமிருந்து எந்த விதமான தகவலும் வரவில்லை. ஏறக்குறைய ஒரு மாதம் சென்றுவிட்டது. அவர் பிரிவைப் பற்றி இருந்த துயரம் சிறுகச் சிறுகக் குறைந்துவிட்டது. இடையிடையே அவர் நினைவு வந்தாலும். அது அவர்களைத் துயரில் ஆழ்த்தும் தன்மை குறைந்ததாகவே யிருந்தது. பிரிவின் தன்மையே இப்படித்தான் இருக்கும்போலும். முதலில் மிகவும் மனத்துக்குகந்த ஒரு பொருளையோ, ஆளையோ பிரியும்போது பெரு வேதனையாக இருந்து பிறகு படிப்படியாக அந்த வேதனை குறைந்துவிடுவது உலக இயற்கை போலிருக்கிறது. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, நாட்டியலிலும்கூட நிலைமை இதேதான். யாராவது ஒரு நாட்டுத் தலைவர் இருக்கும்போது, அவருடைய செயற்கரும் செயல்களையும் திறமைகளையும் கண்டு இவருக்குப்பின் இனி எப்படி நாடு நடைப்பெறப்போகிறதோ என்று ஐயுறுவது மக்கள் இயல்பு அவர் இறந்தோ மறைந்தோ போய்விடும் சமயங்களில் இந்த உணர்ச்கி பெருத்த அளவில் ஏற்படு வதுண்டு. ஆனால், நாளடைவில் அவரில்லாமலே கூட நாடு இயங்கிக் கொண்டிருக்கிற தன்மையைக் கண்டபிறகு எழுந்த ஐயுறவெல்லாம் எங்கோ ஓடி மறைந்து விடுவது கண்கூடு. அண்ணாமலைப் பண்டிதர் சென்னைக்குப் போனபிறகு, ஜமீந்தார் வீட்டிலிருந்து இரண்டு மூன்று முறை ஆளனுப்பித் தங்கத்தை அழைத்து வரச் செய்தார்கள், தங்கத்திற்கு அங்குபோக விருப்பம் இல்லையென்றாலும் மரகத அம்மாள். "ஏன் பெரியவர்களுடைய ஆசையை மறுக்க வேண்டும்?' போய் ஒருநாள் இருந்துவிட்டு வாவேன்!" என்று சொல்லித் அசிகத்தை அனுப்பிவைத்தாள். தங்கம் அங்குபோய். ஜமீந்தார் கருணாகரருடனும், ஜமீந்தாரிணி பெரியம்மாவுட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/198&oldid=854310" இலிருந்து மீள்விக்கப்பட்டது