பக்கம்:மன ஊஞ்சல்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 189 னும் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருவாள். ஆனால், இந்தத் தடைவைகளிலெல்லாம், ஜமீந்தார் வீட்டில், தங்கத்திற்கு அவர்கள் நகைகளோ பொருள்களோ கொடுத்துக் கோபப் படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தங்கம் ஜமீந்தார் வீட்டுக்குப் போய்த் திரும்பி வந்தாள். வாசலில் அவளை இறக்கி விட்டுவிட்டு வண்டிக் காரன் போய்விட்டான். அவள் வீட்டிற்குள் நுழைந்தபோது, மரகத அம்மாளு டள், ராதா உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். தங்கத்தைக் கண்டவுடன் மரகத அம்மாள், ஏம்மா தங்கம், ராதா சொல்வது உண்மைதானா?” என்று கேட்டாள். "ராதா என்ன?’ என்று தங்கம் அவள் பக்கம் திரும்பிக் கேட்டாள் ராதா முதலில் தயங்கினாள் 'ஜமீந்தார் கருணாகரர் மாளிகையை யாரோ விலைக்கு வாங்கிவிட்டார்களாம். ஜமீந்தார் வீட்டார் பட்டணத்துக்குப் புறப்பட்டுப் போய் அங்கேய்ே இருக்கப்போகிறார்களாம்! இப்படி ஊரில் பேசிக் கொள்கிறார்கள்.’’ என்றாள் ராதா, 'எனக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாதே' என்று வியப்புக்குறியுடன் சொன்னாள் தங்கம். "உனக்கு யார் இந்தச் செய்தியைச் சொன்னார்கள்?" என்று ராதாவை மரகத அம்மாள் கேட்டாள். 'கோயிலில்தான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். இன்னும் என்னென்னவோ பேசிக்கொண்டார்கள். ஜமீந்தார் பெரிய செலவாளியாம். நிறையக் கடன் வாங்கியிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/199&oldid=854311" இலிருந்து மீள்விக்கப்பட்டது