பக்கம்:மன ஊஞ்சல்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மன ஊஞ்சல் கந்தசாமி வாத்தியார் வீட்டுக்கு வர நேரமாகுமாகை யால் அவர் மனைவி மரகத அ ம் மா ஒரு மூலையிலே உட்கார்ந்து பெரிய எழுத்து இராமாயணத்தை மூக்குக் கண்ணாடியின் வாயிலாகக் கண்ணுக்குள்ளே ப தி த் து க் கொண்டிருந்தாள். தங்கம் மட்டும் சன்னலோரத்திலே இருந்து தோட்டத்துக்குள்ளே தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தாள். - அந்தச் சன்னலுக்கு நேரே தோட்டத்தின் ஒரு மூலையிலே ஒரு மல்லிகைப் பந்தல் இருந்தது. தோட்டத்தின் பிற பகுதிகளிலே காய்கறிச் செடிசளும், கீரைப்பாத்திகளும் பிற பூஞ்செடிகளும் ஆங்காங்கேயிருந்தன. இந்த மல்லிகைப் பந்தல், கந்தசாமி வாத்தியார் அந்த வீட்டிற்குக் குடிவந்த ஆரம்பத்தில் வைக்கப்பட்டது. ஆளுயரத்திற்குக் காவணம் கட்டி அதன் மீது செடியிடர விடப்பட்டிருந்தது. தல்ல இருண்ட பச்சை நிறமுள்ள இலைகளோடு இடையிடையே கிளிப்பச்சை நிறமான கொழுந்து இலைகளும் தலை நீட்டி அந்த மல்லிகைப்பந்தல் பச்சைப்பசேலென்று கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளித்தது. அந்தப் பச்சைப் பரப்புக்கு இடையிடையே நீட்டிக் கொண்டிருந்த துரய வெள்ளை நிறமான அரும்புகள், பட்டு மெத்தையில் இடையிடையே தைத்த குஞ்சங்கள் போலத் தோன்றின. மெல்லத் தவழ்ந்து வ ந் த தென்றல் காற்று அந்த மல்லிகையின் மணத்தை அள்ளிக் கொண்டு வந்து வீடு முழு வதும் நிரப்பியது. தங்கம் தற்செயலாக அந்த மல்லிகைப் பந்தலை நோக்கினாள். அவள் விழிகள் அப்படியே, அ ந் த த் திசையிலேயே பதிந்து விட்டன. இருண்டு விளங்கிய அந்தக் கருவிழிகள் குத்து நோக்காக அந்தப் பந்தலையே நோக்கின. "யார்?' என்ற வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெடித்துக் கிளம்பின,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/20&oldid=854312" இலிருந்து மீள்விக்கப்பட்டது