பக்கம்:மன ஊஞ்சல்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மன் ஊஞ்சல் தாராம். அவரைக் கடனாளியாக்கியதே அண்ணாமலைப் பண்டிதர்தானாம். அந்தக் கடனையெல்லாம் அடைப்பதற் காகத்தான் இப்போது மாளிகையை விற்றுவிட்டாராம்!” என்றாள் ராதா, அண்ணாமலைப் பண்டிதரைப் பற்றிக் குறிப்பிட்டதும் மரகத அம்மாள் முகம் சுளித்தது. தங்கத்திற்குத் திடுக் கிட்டது. அவர்களால் இந்தச் செய்தியை நம்ப முடிய வில்லை. அண்ணாமலைப் பண்டிதர் ஜமீந்தாரைக் கடனாளி யாக்கி யிருப்பார் என்பது பொருத்தமாகத் தெரியவில்லை.

  • ஊரில் பேசுவதெல்லாம் உள்ளபடியாயிருக்கும்? யாரோ ஜமீந்தாரும் பண்டிதரும் நட்பாயிருப்பதைப் பிடிக்காமல் கதை கட்டிவிட்டிருக்கிறார்கள்!” என்று அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்தாள்.

ஆனால், அதன் பிறகு நெடுநாட்களாகத் தங்கத்திற்கு ஜமீந்தார் வீட்டிலிருந்து அழைப்பு வரவேயில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் கந்தசாமி வாத்தியார் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்ததும், தான் அன்று வாங்கிய சம்பளப்பணத்தை மரகத அம்மாளிடம் கொடுத்து, 'மரகதம், இந்த மாதம் தான் நமக்கு அதிகச் செல வில்லையே! இந்தப் பணத்தில் கொஞ்சத்தை எடுத்து கதலிப் பட்டணத்துக்குப் போய் உனக்கும் தங்கத்துக்கும் சேலை யெடுத்துக்கொண்டு வாருங்களேன்!” என்று சொன்னார். இன்பத்திலும் சரி, துன்பத்திலும் சரி கந்தசாமி வாத்தியார் சொன்னால் சொன்னதுதான், மரகத அம்மாள் அவர் கூறியபடிதான் நடப்பாள். அது தான் தன் கடமை என்று நினைக்கும் பெண்மணி அவள். மறுநாள் கந்தசாமி வாத்தியார் பள்ளிக்கூடத்திற்குச் சென்றவுடன், மரகத அம்மாள் தங்கத்தை யழைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/200&oldid=854313" இலிருந்து மீள்விக்கப்பட்டது