பக்கம்:மன ஊஞ்சல்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் ஊஞ்சல் 19i கொண்டு பேருந்தில் கதவிப்பட்டணத்துக்குப் புறப்பட்டாள். தங்கம், ராதாவையும் அழைத்துக் கொண்டு போவோம் என்று கூறியதன் பேரில், அவளையும் கூடக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். மூவரும் கத லிப்பட்டணம் வந்து துணிமணிக் கடைகளையெல்லாம் பார்த்துத் தங்களுக்கு வேண்டிய சேலை துணிமணிகளை வாங்கிக்கொண்டார்கள். திரும்பவும் நெய்யூருக்கு அன்று மாலையில் 4 மணிக்குத்தான் வண்டி இருந்தது. அதுவரை என்ன செய்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை. கதவிப்பட்டணம், கோயிலுக்குப் போய் வரலாம் என்று மரகத அம்மாள் கூறினாள். ராதா குறுக்கிட்டு, 'அம்மா! நான் இவ்வூர் ஜமீந்தார்மாளிகையைப் பார்த்ததேயில்லை. அங்கே போய்த் திரும்பலாமே!' என்றகள். மரகத அம்மாளுக்கு இது சம்மதமில்லை. ஒருவர் வீட்டுக்கு அழையாமற் போய் உபசாரம் பெறுவது அவளுக்குச் சிறிதுகூடப் பிடியாது. ஆனால் தங்கம், ராதாவுடன் சேர்ந்துகொண்டு, "ஆமா, அம்மா! அங்கே போய் வரலாம். அவர்கள் நல்லவர்கள். அப்படியெல்லாம் நினைக்கமாட்டார்கள். நாம் போனால், பெருமைப்பட்டுக் கொள்வார்கள்!” என்று சொன்னாள். சிறியவர்களான அந்தப் பெண்களின் ஆசையைக் கெடுக்க வேண்டாம் என்று மரகத அம்மாள் அவர்களுடைய பேச்சுக்கு ೭-೯-೨--7ರ್ವೆ. ஜமீந்தார் வீட்டை நோக்கி நடந்தார்கள். வழியில் ஒரு சாப்பாட்டுக் கடையிருந்தது. சாப்பாட்டு நேரத்தில் போய் அவர்களுக்குத் துன்பம் கொடுக்கக் கூடாது, இங்கேயே சாப்பிட்டுவிட்டுப் போய் விடுவோம் என்று சொன்னாள் மரகதம்மாள். "அங்கே போய் அவர்கள் சாப்பிடச் சொல்லி நாம் மறுத்துரைத்தால் வருத்தப்பட மாட்டார்களா?' என்று தங்கம் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/201&oldid=854314" இலிருந்து மீள்விக்கப்பட்டது