பக்கம்:மன ஊஞ்சல்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 193 "தங்கம்மா! எங்கே வந்தீங்க?' என்று அந்தக் கிழவன் கேட்டான். அவன் கையில் செடிகளுக்குத் தண்ணிர் ஊற்றும் பூவாளி இருந்தது. அவன் ஜமீந்தார் வீட்டுத் தோட்டக்காரன் என்று அவனைப் பார்த்தவுடன் தங்கம் தெரிந்து கொண்டாள். . "தோட்டக்கார ஐயா, ஜமீத்தாரி ஐயா @3a இல்லையா?" என்று கேட்டாள் தங்கம், . "பட்டணத்துக்குப் போயிருக்காங்க அம்மா!” என்றான் கிழவன். "எப்போ வருவார்கள்?' ' "'என்னம்மா இப்படிக்கேக்கறிங்க? உங்களுக்கு உண்மை யிலேயே தெரியாதா? ஐயாதான் இந்த அரண்மனையை வித்துட்டாங்களே! இனிமே பட்டணத்துலே தான் இருப்பாங்க!' என்றான் தோட்டக்காரக் கிழவன். "உண்மை தானா? எனக்குத் தெரியாதே! விலைக்கு வாங்கியவங்க யாரு தெரியுமா?* 'அதாம்மா தெரியலே. யாரோ பட்டணத்துலே யிருக்கிறவங்க வாங்கியிருக்காங்கன்னு பேசிக்கிறாங்க : என்றான் கிழவன். 'மாளிகையைப் பார்த்துக் கொள்ள ஆளு யாரும் இல்லையா?” நான்தாம்மா சாவியெல்லாம் வைத்திருக்கிறேன். ஜமீந்தாரையா போன போது சாவியையெல்லாம் என்கிட்டேக் கொடுத்திட்டுப் போனாரம்மா !” என்றான் கிழவன். up-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/203&oldid=854316" இலிருந்து மீள்விக்கப்பட்டது