பக்கம்:மன ஊஞ்சல்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1060t ஊஞ்சல்

21. விற்ற மாளிகையில் விருந்து மரகத அம்மாள் 'அம்மா!' என்று கூவிக் கதறியதைக் கேட்ட தங்கமும் ராதாவும் அங்கே ஒடி வந்தார்கள். அவர்கள் இருவரும் வேறு படங்களைப் பார்த்துக்கொண்டு வந்தபடியால், மரகத அம்மாள். அந்தக் குறிப்பிட்ட படத்தைப் பார்த்துவிட்டுக் கதறினாள் என்ற விஷயம் அவர் களக்குத் தெரியாது. ஆனால், அருகே வந்து பார்த்தபோது மரகத அம்மாள் சுவரில் மேலே சற்றுச் சாய்வாக மாட்டப் பட்டிருந்த படத்தையே பார்த்துக்கொண்டிருப்பதையும் அவள் கண்களிலிருந்து கண்ணிர் முத்துக்கள் சிந்திக்கொண் டிருப்பதையும் கண்டு திடுக்கிட்டார்கள். சுவரில் மாட்டியிருந்த படத்தைப்பார்த்த தங்கத்திற்குத் தன் உள்ளத்திலிருந்த திகைப்பை அடக்கவே முடியவில்லை. ராதாவும் பெரிதும் திகைப்படைந்தாள். ஏனெனில், அந்தச் சுவரில் இருந்த படம் ஏறக்குடைய மரகத அம்மாளைப் போலவே இருந்தது. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், மரகத அம்மாள் இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின்னால் எப்படியிருக்கக் கூடுமோ அப்படியிருந்தது. யாரேனும் ஓவியன் வரைந்த படமாயிருந்தால், அவன் மரகத அம்மாளைப் பார்த்துவிட்டு, அவள் இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/205&oldid=854318" இலிருந்து மீள்விக்கப்பட்டது