பக்கம்:மன ஊஞ்சல்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 197 நிலையில் அவளைத் தொந்தரவுபடுத்தக் கூடாதென்று அப்போது அவள் எதுவும் கேட்கத் துணியவில்லை. சிறிது நேரம் அழுதுகொண்டிருந்த மரகத அம்மாள். தன் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு தங்கத்தின் பக்கம் திரும்பினாள். 'அம்மா!' என்று ஏதோ Gتعتاع போவதுபோல் தங்கம் அழைத்தாள். ஆனால், எந்தச் சொல்லும் அதைத் தொடர்ந்து அவள் வாயிலிருந்து வெளிப்படவில்லை. 'தங்கம், வா! வீட்டுக்குத் திரும்பலாம்” என்று சொல்லிக் கொண்டே மரகத அம்மாள் திரும்பி நடந்தாள். அவளைப் பின் தொடர்ந்து தங்கமும், ராதாவும் சென்றார் கள். தோட்டக்காரச் சுப்பையாவும் அவர்களோடு வெளியில் வந்தான். மாளிகையின் முன் முற்றத்துக்கு வந்ததும், சுப்பையா வெளிக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டிக்கொண்டே, 'அம்மா! கொஞ்சம் இருங்கள்! வண்டி பூட்டிக்கொண்டு வந்துவிடுகிறேன்!” என்றான். 'இல்லை, நாங்கள் பேருந்திலேயே போய்விடுகிறோம்" என்றாள் தங்கம். 'இப்போதே மணி நான்காகிவிட்டது. நீங்கள் கடைத் தெருவுக்குப் போவதற்குள் பேருந்து போய்விடும்' என்று தோட்டக்காரன் சுப்பையா கூறியதும் அவள் வாயை மூடிக் கொண்டாள். தோட்டக்காரக் கிழவன், அவர்களை அங்கே நிறுத்தி, விட்டு மாளிகையைச் சுற்றிக்கொண்டு பின் பக்கமாகப் போனான். சிறிது நேரத்தில் ஜல் ஜல் என்று கழுத்து மணி நாதமெழுப்ப, பின்புறத்திலிருந்து ஜமீந்தார் வீட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/207&oldid=854320" இலிருந்து மீள்விக்கப்பட்டது