பக்கம்:மன ஊஞ்சல்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - மன ஊஞ்சல் இரட்டை மாட்டு வில் வண்டி. சில நாட்களுக்குமுன் தங்கம் ஒட்டிய அதே வண்டி, மாளிகை முன் வாசல் முற்றத்தில் வந்து நின்றது. மூன்று பெண்களும் வண்டியில் ஏறிக் கொண்டவுடன் சுப்பையா மாடுகளைத் தட்டி ஒட்டினான். வண்டி நெய்யூருக்கு வந்து சேர்ந்து கந்தசாமி வாத்தியார் வீட்டின் முன் நின்ற போது, அவர் அப்போது தான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தார். வண்டியிலிருந்து பெண்கள் இறங்கிவந்ததைக் கண்டதும் அவர் முகத்தில் வியப்புக்குறி மேலிட்டது. அவர்கள் இறங்கியவுடனே தோட்டக்காரக் கிழவன் வண்டியைத் தட்டிக் கொண்டு போய் விட்டான். "மரகதம், ஜமீந்தார் விட்டுக்கா சென்றீர்கள்? அங்கே யாரும் இல்லையே!” என்று கேள்விக் குறி போட்டுக் கேட்டார் கந்தசாமி வாத்தியார், அங்கே ஒருவரும் இல்லை என்று உங்களுக்குத் தெரியுமா. என்று வியப்புடன் கேட்ட மரகதம்மாள், மாளிகை பார்க்கப் போன செய்தியைக் கூறினாள். பேசிக்கொண்டே அவர்கள் உள்ளே வந்தார்கள். "இதோ பாருங்கள்! எல்லாம் எனக்கு ஒரே மர்மமா யிருக்கிறது, ஜமீந்தார் வீட்டிலே என் அம்மாவுடைய படம் இருக்கிறது. ஜமீந்தாருக்கும் என் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதே புரியவில்லை. அவர்கள் வீட்டில் அம்மாவின் படத்தை ஏன் வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை' என்று சொன்னாள் மரகத அம்மாள். "மரகதம்! இதில் என்ன மர்மம் இருக்கிறது? பள்ளிக் கூடத்தில் படிச்கும் போது உன் அண்ணனும் ஜமீந்தாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/208&oldid=854321" இலிருந்து மீள்விக்கப்பட்டது