பக்கம்:மன ஊஞ்சல்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 199 நெருங்கிய நண்பர்களாய் இருந்தார்கள் என்பதை நீ மறந்து விட்டாயா ஜமீந்தாரும் உன் அண்ணனும் ஒன்றாகவே இருந்ததையும், எப்போதும் உன் அண்ணன் ஜமீந்தார் வீட்டிலேயே இருந்து வந்தார் என்பதையும், மறந்து விட்டாயா? முன்னால் இருந்த பெரிய ஜமீந்தார். இவர் களுடைய நட்பைக் கண்டு, உன் அண்ணனுக்காகத் 'தன் மாளிகையிலேயே ஒர் அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தார் அல்லவா? அப்போது உன் அண்ணன் உன் அம்மாவின் படத்தை அங்கு கொண்டு போய் மாட்டியிருக்கலாம்' என்று சொன்னார் கந்தசாமி வாத்தியார், அண்ணனுடைய நினைவுகள் மரகத அம்மாளின் மனத்தில் தோன்றியவுடன் அவளுக்குத் தாங்க முடியாத துன்பம் ஏற்பட்டது. அவள் வாய்விட்டுப் பேசமுடியாமல் விசும்பி விசும்பி அழத் தொடங்கி விட்டாள், கந்தசாமி வாத்தியாருக்கு நாம் ஏன் இந்தச் செய்தியை இப்பொழுது சொன்னோம் என்று ஆகிவிட்டது. கட்டுக் கவலைகள் இல்லாமல் ஜமீந்தார் மகனோடு மகனாக அரசகுமாரன் போல் வாழ்ந்த தன் அண்ணன் கடைசியில் என்ன ஆனா ரென்றே தெரியாமல் போய் விட்டதை எண்ணி மரகதம்மாள் அழத் தொடங்கி விட்டாள். மரகத அம்மாளுக்குத் தன் தாயிடமும், தாயைக் காட்டிலும் அண்ணனிடமும் பற்றுதல் அதிகம். - இன்பமாக வாழ்ந்த தன் தாய் பெற்ற பிள்ளைகளைப் பேணி வளர்த்து ஆளாக்கிவிட்ட அந்த அருமை யன்னை கடைசியில் துன்பந்தாங்க முடியாமல் நெஞ்சு நொந்து நொந்து இறந்து போனதையும். இளவரசரைப் போல் இருந்த தன் அண்ணன் கடைசியில் வாழ்வில் சலிப்பு ஏற்பட்டு எங்கோ போய் விட்டதையும் என்ன ஆனார் என்று தகவல் இல்லாமல் போய்விட்டதையும் எண்ண எண்ணப் பழைய நினைவுகளெல்லாம் வந்து அவளைப் படாதபாடு படுத்தின,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/209&oldid=854322" இலிருந்து மீள்விக்கப்பட்டது