பக்கம்:மன ஊஞ்சல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் - 11 யாரோ ஒருவன் அரும் பு மல்லிகைகளை விரும்பிப் பறித்துக் கொண்டிருந்தவன் அந்தக் குரல் கேட்டதும் திடுக் கிட்டுப்போனான். அப்படியே, கையில் இருந்த அரும்பு களைக் கீழே போட்டுவிட்டுத் தோட்டத்துச்சுவரை நோக்கிப் பாய்ந்தான். ஐந்தடி உயரமுள்ள அந்தத் தோட்டத்துச் சுவரில் பரபரவென்று பாய்ந்து ஏறினான். ஆச்சு! இன்னும் கொஞ்சம்தான் பாக்கி! சுவரின் உச்சிக்குப் போய்விட்டால் அடுத்த பக்கம் குதித்துத் தப்பி ஓடிவிடலாம். அதற்குள், பதற்றமோ என்னவோ, தடாவென்று தோட்டத்தின் உட் புறமாகவே விழுந்து விட்டான் அந்த மனிதன். விழுந்தவன் ஒடுவதற்காக மீண்டும் எழுந்திருக்க வேண்டும். ஆனால் அவன் எழவேயில்லை. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த தங்கம் சட்டென்று எழுந்து, அவன் விழுந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றாள். அவனைக் கண்டவுடன் அவள் ஆடாது அசையாது அச் சடித்த பதுமைபோல நின்று விட்டாள். என்ன கவர்ச்சி யான முகம்! அவள் இப்படிப்பட்ட எழில் நிறைந்த ஆடவன் உருவத்தை இதற்கு முன் கண்டதேயில்லை என்று சொல்ல லாம். ஆனால் அப்படி ஒரேயடியரக உறுதியிட்டுச் சொல்லி விடவும் முடியாது. ஏனெனில் அவள் சிறுமியாயிருந்தபோது பள்ளிச் சிறுவர்கள் பலரைக் கண்டிருக்கிறாளே தவிர தெரு வில் பலப் பலரைக் கண்டிருக்கிறாளே தவிர, பெரியவள் ஆன பிறகு,அவள் தன் தந்தையையும் அவரோடு தொடர்புடைய ஒரு சிலரையும் தவிர எந்த ஆடவரையும் - அதிலும் இளை ஞர்கள் யாரையும் பெரும்பாலும் கண்டதில்லை. அப்போது அழகே வ டி வா ன அந்த இளைஞனின் கவர்ச்சிகரமான முகத்தைக் கண்டதும் அவள் அப்படியே பிரமைக் கலக்கம் அடைந்து நின்று விட்டாள். சற்று நேரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/21&oldid=854323" இலிருந்து மீள்விக்கப்பட்டது