பக்கம்:மன ஊஞ்சல்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மன ஊஞ்சல் எல்லாவற்றையும் எண்ணியெண்ணி அழுவதைத் தவிர அவளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. தன் தாய் அழுவதைக் கண்டு நின்று கொண்டிருந்த தங்கத்திற்கும் நெஞ்சில் துயரம் மூண்டது. அவளுடைய முகத்திலும் துயர உணர்ச்சி ஏற்பட்டது. 'அம்மா! அழாதே அம்மா!' என்று அருகில் நெருங்கி வந்து ஆதரவோடு மரகத அம்மாளின் அருகில் உட்கார்ந்து முகத்தைத் துடைத்து விட்டாள். "மரகதம்! பழைய நினைவுகளை மறந்துவிடு. எத்தனை யழுதாலும் நடந்தது திரும்பப் போவதில்லை' என்று ஆறுதல் கூறினார் கந்தசாமி. இந்தத் துயரக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற இராதாவின் மனம் இளகியது. ஆனால் என்ன செய்வதென்று புரியாமல் அவள் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். நெடு நேரத்திற்குப் பிறகு, மரகத அம்மாள் ஒருவாறு மனந் தெளிந்து எழுந்து வீட்டுவேலைகளைக் கவனிக்கச் சென்ற பிறகுதான் அவள் தங்கத்திடம் விடை பெற்றுக்கொண்டு தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள். இந்த நிகழ்ச்சி நடந்து ஏறக்குறைய ஒர் ஆண்டு கழிந்து விட்டது. கதலிப்பட்டணம் ஜமீந்தார் மாளிகைக்கு ஜமீந்தாரும் திரும்பி வரவில்லை. விலைக்கு வாங்கியவர்கள் யாரும் கூட வந்து குடியிருக்கவில்லை. சென்னைக்குச் சென்ற அண்ணாமலைப்பண்டிதரிடத்திலிருந்து யாதொரு தகவலு மில்லை. காலம் பாடு நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஒருநாள் ஜமீந்தார் மாளிகைத் தோட்டக்காரன் சுப்பையா கந்தசாமி வாத்தியார் வீட்டுக்கு வந்தான். அவன் கையில் ஒரு கடிதம் கொண்டு வந்திருந்தான், அதை அவன் கந்தசாமி வாத்தியாரிடம் கொடுத்தான். அதை வாங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/210&oldid=854324" இலிருந்து மீள்விக்கப்பட்டது