பக்கம்:மன ஊஞ்சல்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 201 பிரித்துப் படித்த கந்தசாமி வாத்தியாரின் முகத்தில் வியப்புக் குறி படர்ந்தது. எதிரில் இருந்த மரகத அம்மாளும் தங்கமும் என்ன செய்தி என்று தெரிந்த கொள்ள ஆவலா யிருந்தார்கள். கந்தசாமி வாத்தியார் தம் கையில் இருந்த அந்தக் கடிதத்தைத் தங்கத்திடம் கொடுத்து. "படி', என்றார். தங்கம் படித்தான். அன்புள்ள கந்தசாமி வாத்தியார் அவர்களுக்கு, வணக்கம், நான் என் மாளிகையை என் நண்பர் ஒருவருக்கு விற்று விட்டேன். நாளைக் காலை அவருக்கு இந்த மாளிகையை ஒப்படைக்கப் போகிறேன். அந்த நண்பருக்கு இந்த மாளிகையை ஒப்படைக்கும் சமயம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரு விருந்து வைப்பதென்று தீர்மானித் தோம். தாங்களும் தங்கள் மனைவியாருடனும் மகள் தங்கத்துடனும் விருந்துக்கு வந்து சிறப்பிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.தங்கள் நண்பர் முருகேசரை அழைத்து வரும்படி கேட்டுக் கொள்கிறேன். தங்கத்தின் தோழிப் பெண்ணையும் அவள் விரும்பினால் கூட்டிக்கொண்டு வர வேண்டியது. இப்படிக்குத் தங்களன்புள்ள கருணாகரன், அழைப்பு விசித்திரமானதாயிருந்தது. கந்தசாமி வாத்தியார் தோட்டக்காரனைப் பார்த்து, 'மாளிகையை யார் வாங்கியிருக்கிறார்கள்?' என்று கேட்டார். "அது தெரியலிங்க! யாரோ சென்னைப்பட்டணத்துக்காரங்களுக்கு தான் என்று சொல்றாங்க!' என்று சொன்னான் சுப்பையாக் கிழவன். 'தங்கம், ராதா வருகிறாளா என்று கேட்டுக்கொண்டு வா, நான் முருகேசரைப் பார்த்துவிட்டு வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/211&oldid=854325" இலிருந்து மீள்விக்கப்பட்டது