பக்கம்:மன ஊஞ்சல்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மன ஊஞ்சல் நாளைக்குப் புறப்பட ஏற்பாடு செய்யுங்கள்!' என்று கூறி விட்டு வெளியில் சென்றார் கந்தசாமி வாத்தியார். யாருக்கோ மாளிகையை விற்பதற்குத் தங்களுக்கு ஏன் விருந்து வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை. இருந்தாலும் ஜமீந்தாரே அழைத்திருக்கும்போது போகாமல் இருப்பது மரியாதையல்ல என்று அவர்கள் போக முடிவு செய் தார்கள். - தோட்டக்கார சுப்பையா விடை பெற்றுக்கொண்டு சென்றான். மறுநாள் ஜமீந்தார் மாளிகைக்கு, எல்லோரும் புறப்பட்டார்கள். நடுத்தெருவுக்கு அவர்கள் வந்து பேருந்துக் காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். கந்தசாமி வாத்தியார் முருகேச வாத்தியார், மரகத அம்மாள், தங்கம், ராதா ஆக ஐந்து பேரும், வேறு நாலைந்து பேரும் நின்றார்கள். பேருந்து வந்தது. அந்த வேற்று மனிதர்களில் இரண்டு பேர் வண்டியில் முந்திக்கொண்டு ஏறிவிட்டார்கள். பேருந்து நடத்துநர். நான்கு பேருக்குத்தான் இடமிருக்கிறதென்று கூறினான். உடனே முருகேச வாத்தியார் தான் நின்று கொள்வதாகக் கூறினார். இவர்களில் யாரும் நின்று கொள்வது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், யாராவது நின்றுகொள்ளத்தான் வேண்டும். யாரை நின்று கொள்ளச் சொல்வதென்று தெரியாமல் அவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வண்டியில் உட்கார்ந்திருத்த ஒர் இளைஞன், முருகேச வாத்தியாரிடம் வந்து, "ஐயா! தங்களில் யாரும் நின்றுகொள்ள வேண்டாம் தான் இறங்கிக் கொள்கிறேன். தயவுசெய்து நீங்கள் போய் வாருங்கள்’’ என்று கூறினான். முருகேச வாத்தியார் அவனை உற்று நோக்கினார். அவன் யாரென்றே அவருக்குத் தெரியவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/212&oldid=854326" இலிருந்து மீள்விக்கப்பட்டது