பக்கம்:மன ஊஞ்சல்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 203 , 'இல்லை தம்பி, நீ என்ன வேலையாகப் போகிறாயோ, அதற்குத் தடையாக நான் இருக்கக்கூடாது' என்று கூறினார். "ஐயா! எனக்கொன்றும் அவசர வேலையில்லை, மாலை வண்டியில் போனாலே போதும்! தயவு செய்து தாங்கள் ஏறிக் கொள்ளுங்கள்!' என்று சொல்லி இறங்கிவிட்டான். - ** - - நடத்துநர் சீக்கிரம் சீக்கிரம்' என்று அவசரப் படுத்தவே, ராதாவும், முருகேசரும் பேருந்தில் உடனடியாக ஏறிக்கொண்டார்கள். வண்டி உடனடியாக புறப்பட்டு விட்டது. கீழே இறங்கிய அந்தப் பையனையே உற்று நோக்கினார் முருகேசர். அவனை எங்கோ பார்த்த மாதிரி யிருந்தது. ஆனால் எங்கே எப்போது என்பது தான் நினைவுக்கு வரவில்லை. அவன் யார் என்பதும் தெரிய வில்லை, . . - "வாழ்க்கையில் எப்படி எப்படியோ எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளிலே இது ஒன்று' என்று தமக்குள் அவர் நினைத்துக் கொண்டார். மற்றவர்களுக்கும் கூட அந்தப் பையனை எங்கோ பார்த்தமாதிரியாக நினைவு இருந்தது. தங்கத்திற்கும் ராதா விற்கும் அவன் குரல் கூடப் பழக்கப்பட்டதாகத் தோன்றி யது. ஆனால் எல்லாம் உகுப்படியாக இல்லாத ஓர் அனுமான மாகவே போய்விட்ட படியால் யாராலும் அவனை இன்னாரென்று தெளிவாக முடிவு கட்ட முடியாமல் போய் விட்டது. கதலிப்பட்டணம் கடைத் தெருவில் அவர்கள் காரை விட்டிறங்கி ஜமீந்தார் மாளிகைக்கு நடந்து சென்றார்கள். மாளிகையை தெருங்கி வந்தவுடனேயே அது மிக நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது அவர்களுக்குத் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/213&oldid=854327" இலிருந்து மீள்விக்கப்பட்டது