பக்கம்:மன ஊஞ்சல்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மன ஊஞ்சல் மாளிகை முழுவதும் புதிதாக வண்ணம் பூசிச் சுண்ண மடித்துப் பார்ப்பதற்குப் புதிதாகக் கட்டப்பட்டதுபோல் தோற்றமளித்தது. எங்கும் வண்ணக் கொடிகள் தலைக்கு மேலே குறுக்கும் நெடுக்குமாகக் கட்டப் பட்டிருந்தன. காம்பவுண்டு வாசலில் இருபுறமும் குலைதள்ளிய வாழை மரங்கள் வைத்துக் கட்டப்பட்டிருந்ததுடன். மாவிலையும் பனங்கூந்தலும் தோரணமாகக் கட்டப் பட்டிருந்தன. மொத்தத்தில் அது ஒரு திருமண வீடுபோல் அலங்காரமாகக் காட்சியளித்தது. ஜமீந்தார் கருணாகரர் மாளிகையில் எல்லாம் விசித்திர மாக நடக்கும் போலிருக்கிறது என்ற எண்ணத்துடன்தான் அவர்கள் சென்றார்கள். மாளிகையை விற்பவர் அதை யலங் கரித்து அதற்கொரு விருந்து வைத்து விற்பது இதுவரை அவர்கள் கண்டுங்கேட்டு மிராத செயலாயிருந்தது. அவர்கள் மாளிகைக்குள் நுழைந்தவுடன், தோட்டக் காரச் சுப்பையாதான் முன்னால் வந்து வரவேற்றான். உன்ளே போய்ப் பார்த்தால், ஆங்காங்கே புதிதாக வந்திருந்த வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் கண்டார்களே தவிர வேறு யாரையும் வீட்டுக்காரர் விருந்தினர் sras*ց աւն அவர்கள் காணவில்லை. அவர்கள் ஐந்து பேரைத் தவிர வேறு யாரும் இல்லை. எல்லாம் மூடுமந்திரமாக இருக்கிறதென்று நினைத்துக் கொண்டே, கந்தசாமி வாத்தியார் தோ ட் ட க் கா ர ச் சுப்பையாவை விவரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கூப்பிட்டார். - அவர்கள் கூப்பிட்ட சமயத்தில் சுப்பையாக் கிழவன் அங்கேயில்லை. அவனைக் கண்டு கேட்க வேண்டுமென்று விசாரித்தபோது அவன் எங்கே போனானென்று தெரிய வில்லை என்று வேலைக்காரர்கள் சொல்லிவிட்டார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/214&oldid=854328" இலிருந்து மீள்விக்கப்பட்டது