பக்கம்:மன ஊஞ்சல்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 205 ஒன்றும் புரியாத கந்தசாமி வாத்தியார், உள்ளேபோய்க் கூடம் ஒன்றில் விரித்திருந்த சமுக்காளத்தில் மற்றவர்களோடு உட்கார்ந்தார். சுப்பையா வந்தால்தான் மேற்கொண்டு ஏதாவது விவரம் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவர்கள் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தபோது மாளிகை முற்றத்தில் மாட்டு வண்டியொன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் எல்லோரும் எழுந்து மாளிகை வாசலுக்கு ஒடி வந்தார்கள். மாட்டு வண்டியிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்த வுடன், கந்தசாமி வாத்தியார் முதலியவர்களின் முகத்தில் வெறுப்பும் வியப்புமான உணர்ச்சிகள் தோன்றின. அவர்கள் முகத்தில் பிரதிபலித்த உணர்ச்சிகளைக் காணாமலோ கண்டும் இலட்சியப்படுத்தாமலோ, வண்டியி விருந்து இறங்கி வந்து நலம் விசாரித்தான் சுந்தரேசன், அவனுடன் கூடவே கடுகடுத்த முகத்துடன் வந்தாள் அவனுடைய தாயார் குணவதியம்மாள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/215&oldid=854329" இலிருந்து மீள்விக்கப்பட்டது